ஆயில் இந்தியா நிறுவனத்தில் காத்திருக்கும் டேட்டா அசிஸ்டெண்ட் வேலை...!!

ஆயில் இந்தியா (Oil India) நிறுவனத்தில் டேட்டா அசிஸ்டெண்ட் (Data Assistant) பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், ஆர்வமும உள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றனர். விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

டுதல் விவரங்களுக்கு https://www.oil-india.com/Document/Career/5e4110efb73d4bcfefcd99bbaf0d9f064bf854cd76519ab45072c91805ac9cec.pdf என்ற இணையதள லிங்க்கைக் கிளிக் செய்து அறியலாம்.

ஆயில் இந்தியா நிறுவனம் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமாகும். ஆயில் இந்தியா லிமிடெட் (Oil India Limited- (OIL) நிலத்தடி பெட்ரோலியப் பொருட்களை அகழ்ந்து எடுக்கும் இந்திய அரசின் இரண்டாவது பெரிய பொதுத்துறை நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.

மத்திய அரசு நிறுவனத்தில் அற்புதமான வேலை இருக்கு...!!!
இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்நிறுவனம், நவரத்தின மதிப்பைப் பெற்ற அந்தஸ்துள்ள நிறுவனமாகும்.

இந்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்நிறுவனத்தின் தலைமையகம் அசாம் மாநிலத்தின் திப்ருகர் மாவட்டத்தில் உள்ள துலியஜான் நகரத்தில் உள்ளது.

ஆயில் இந்தியா நிறுவனத்தில் காத்திருக்கும் டேட்டா அசிஸ்டெண்ட் வேலை...!!

9,000 ஊழியர்கள் கொண்ட இந்நிறுவனம் நவரத்தின மதிப்பு அந்தஸ்தை பெற்றதாகும். இந்நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகம் நொய்டாவில் உள்ளது.

ஆயில் இந்தியா நிறுவனம், இயற்கை எரிவாயு, பெட்ரோலியப் பொருட்கள் கிடைக்கும் இடங்களை அறிந்து அகழ்வாராய்ச்சி செய்வது, கச்சா எண்ணெயை சுத்திகரிப்பது, பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் திரவ பெட்ரோலிய வாயுவை உற்பத்தி செய்தல் ஆகியவை முக்கியப் பணிகளாகும்.

அசாம் மாநிலத்தின், திக்பை எனுமிடத்தில் 1889-ல் முதன் முதலில் பிரிட்டிஷ் இந்தியா ஆட்சியினரால் எரி எண்ணெய் தோண்டி எடுக்கப்பட்டதன் மூலம் ஆயில் இந்தியா நிறுவனத்தின் வரலாறு உருவானது.
2014 ஆண்டு முடிவில் ஆயில் இந்தியா நிறுவனம் 3.446 மில்லியன் மெட்ரிக் டன் கச்சா எண்ணெயையும், 2625.81 மில்லியன் மெட்ரிக் டன் இயற்கை எரிவாயுவையும் மற்றும் 46,640 மெட்ரிக் டன் திரவ பெட்ரோலிய வாயுவையும் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது.

இந்நிறுவனம் தனது உற்பத்தியில் 80 சதவீதத்தை வடகிழக்கு இந்தியாவில் உற்பத்தி செய்கிறது. மேலும் ஒடிசா, அந்தமான், தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் கடற்கரை பகுதிகளிலும், ராஜஸ்தான் மாநிலத்தின் தார் பாலைவனம் பகுதிகளிலும், அரபிக் கடலையொட்டிய கடற்கரை பகுதிகளிலும், பிரம்மபுத்திரா ஆற்றுப் படுகைகளிலும், மிசோரம் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் மலைப்பகுதிகளிலும் எரி எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை உற்பத்தி செய்கிறது.

இந்த பெருமை மிகு ஆயில் இந்தியா (Oil India) நிறுவனத்தில்தான் தற்போது டேட்டா அசிஸ்டெண்ட் (Data Assistant) பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரியவந்துள்ளது.

டேட்டா அசிஸ்டெண்ட் (Data Assistant) பணியிடத்துக்கான கல்வி தகுதி:

டேட்டா அசிஸ்டெண்ட் (Data Assistant) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ (Degree / Diploma) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேட்டா அசிஸ்டெண்ட் (Data Assistant) பணிக்கு வயது வரம்பு:

டேட்டா அசிஸ்டெண்ட் (Data Assistant) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 21 என்றும் அதிகபட்ச வயதானது 30 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டேட்டா அசிஸ்டெண்ட் (Data Assistant) பணிக்கான ஊதிய விவரம்:

டேட்டா அசிஸ்டெண்ட் (Data Assistant) பணிக்கு தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.16,640/- ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேட்டா அசிஸ்டெண்ட் (Data Assistant) பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:

டேட்டா அசிஸ்டெண்ட் (Data Assistant) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் / Skill Test cum Personal Assessment மூலம் ஒப்பந்த (Contract) அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 04.1.2024ம் தேதி நடைபெறும் நேர்காணலில் நேரில் சென்று கலந்து கொண்டு பயன் அடையலாம்.

கூடுதல் விவரங்களுக்கு

https://www.oil-india.com/Document/Career/5e4110efb73d4bcfefcd99bbaf0d9f064bf854cd76519ab45072c91805ac9cec.pdf என்ற இணையதள லிங்க்கைக் கிளிக் செய்து அறியலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Oil India Limited (OIL) has announced a new job notification for the Data Assistant Vacancies. The Selection Process will be based on the Walk-In-Interview. Interested candidate(s) should fill the Personal Bio-Data (given on the last two pages of this
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+