மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் (NTPC) நிறுவனத்தில் காலியாக உள்ள Mining Overman, Mining Sirdar உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 178 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.2.80 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

மேலாண்மை : மத்திய அரசு
நிர்வாகம் : நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் (NTPC)
மொத்த காலிப் பணியிடங்கள் : 178
பணி மற்றும் காலிப் பணியிடங்கள் :
- Mining Overman - 74
- Mining Sirdar - 103
- Company Secretary - 1
கல்வித் தகுதி :
Mining Overman - அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் Mining Engineer தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Mining Sirdar - 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Company Secretary - ICSI-ல் member ஆக இருக்கும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 57 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் :
- Mining Overman - ரூ.50,000
- Mining Sirdar - ரூ.40,000/-
- Company Secretary - ரூ.1,20,000 முதல் ரூ.2,80,000
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Mining Overman and Mining Sirdar
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Company Secretary
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட NTPC நிறுவனத்தின் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://careers.ntpc.co.in/openings.php எனும் இணையதளத்தின் மூலம் 15.03.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் தகுதித் திறன் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://careers.ntpc.co.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.


Click it and Unblock the Notifications












