மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் (NTPC) நிறுவனத்தில் காலியாக உள்ள Executive (Hydro) பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 15 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு பி.இ, பி.டெக் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ரூ.60 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

மேலாண்மை : மத்திய அரசு
நிர்வாகம் : நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் (NTPC)
மொத்த காலிப் பணியிடங்கள் : 15
பணி மற்றும் காலிப் பணியிடங்கள்:
- Executive (Hydro - Mechanical) - 05
- Executive (Hydro - Civil) - 10
கல்வித் தகுதி :
Executive (Hydro - Mechanical) - Mechanical Engineering பாடப்பிரிவில் பி.இ, பி.டெக் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Executive (Hydro - Civil) - Civil Engineering பாடப்பிரிவில் பிஇ, பி.டெக் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 01.10.2021 தேதியின்படி விண்ணப்பதாரர் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட NTPC நிறுவனத்தின் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 30.11.2021 தேதிக்குள் கீழே இணைக்கப்பட்டுள்ள இணைய முகவரியின் மூலம் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்பப் படிவம் : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பக் கட்டணம் :
- பொது, ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.300
- எஸ்.சி, எஸ்டி, முன்னாள் இராணுவத்தினர், பெண் விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் கிடையாது.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://careers.ntpc.co.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.


Click it and Unblock the Notifications

