NPCIL Kalpakkam Scientist Recruitment 2023: ரூ.63 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு பணி...!

கல்பாக்கம் அணுமின் திட்டத்தில், எலக்ட்ரிசியன், ஃபிட்டர், எலக்ட்ரானிக் மெக்கானிக், அறிவியல் உதவியாளர், உதவித்தொகை பயிற்சியாளர் உள்ளிட்ட துறைகளில் காலியாக உள்ள 53 பணியிடங்களுக்கு, உதவித்தொகையுடன் பயிற்சி வழங்கப்படவிருக்கிறது. ஆர்வமுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் என, இந்திய அணுசக்தி கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நிர்வாகம் : இந்திய அணுசக்தி கழகம் (NPCIL)

மேலாண்மை : மத்திய அரசு

பணியிடம்: கல்பாக்கம்

கல்பாக்கத்தில் ஊக்கத்தொகையுடன் பயிற்சி...!

பணி விவரம்

Ø Scientific Assistant

Ø Assistant Grade I

Ø Stipendiary Trainee

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்க கடைசி தேதி - 05.01.2024

பணியிடங்கள் எண்ணிக்கை: 53

கல்வி தகுதி:

டிப்ளமோ அல்லது பட்டம் அல்லது 10வது தேர்ச்சி அல்லது இடைநிலை அல்லது பி.எஸ்சி., ஆகியவற்றில், பதவிகளுக்கு ஏற்ப உரிய கல்வி தகுதியை பெற்றிருத்தல் அவசியம் ஆகும். கல்வி தகுதி உள்ளிட்ட கூடுதல் விபரங்களுக்கு, அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

பயிற்சி காலம் ஓராண்டு ஆகும். இந்த காலத்தில் ஊக்கத்தொகை வழங்கப்படும். பயணப்படி, வாடகைப்படி உள்பட அனைத்து சலுகைகளும் அரசு விதிகளுக்கு உட்பட்டு வழங்கப்படும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும். வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. சலுகை, தளர்வுகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வாயிலாக அறிந்து கொள்ளவும்.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்து, திறன் மற்றும் நேர்காணல் என, மூன்று கட்ட தேர்வு மற்றும் கல்வித் தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான நபர்கள் காலிப் பதவிகளுக்கு தேர்வு செய்யப்படுவர். தேர்வுக்கு வரும் நபர்களுக்கு பயணப்படி உள்பட சலுகைகள் வழங்கப்படாது.

முக்கிய அறிவிப்பு:

Ø பொது பிரிவினருக்கு ரூ.100, ஓ.பி.சி., பிரிவினருக்கு ரூ.150 விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். பட்டியலின உள்ளிட்ட மற்ற பிரிவினருக்கு அரசு விதிகள்படி கட்டண விலக்கு கோர தகுதியுடையவர்.

Ø விண்ணப்பதாரர்கள் வேறு எந்த தகவல்களையும் நம்ப வேண்டாம் என, இந்திய அணுசக்தி கழகம் தெரிவித்துள்ளது.

Ø விண்ணப்பதாரர்கள் செயலில் உள்ள தொடர்பு எண், இ-மெயில் ஆகிய விவரங்களை தவறாமல் குறிப்பிட வேண்டும்.

எப்படி விண்ணப்பிப்பது? :

Ø இந்திய அணுசக்தி கழகத்தின் (NPCIL) அதிகாரபூர்வ இணையத்தளம் செல்ல வேண்டும்.

Ø கொடுக்கப்பட்டுள்ள தகுதியைச் சரிபார்க்கவும்.

Ø https://www.npcilcareers.co.in/MAPS202323120/candidate/default.aspx என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்துக்கு செல்லவும்

Ø விண்ணப்ப படிவத்தை நிரப்பவும்.

Ø தேவையான ஆவணங்களை பதிவேற்றவும்.

Ø எதிர்கால தேவைக்கு விண்ணப்பப் படிவத்தை பிரிண்ட் செய்யவும்.

Ø பொதுவான நிபந்தனைகள் என்ற தலைப்பில் விரிவான விபரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளன. இதை படித்து தெரிந்து கொள்ளவும்.

கூடுதல் விவரங்கள் மற்றும் விண்ணப்பம் செய்ய கீழே கொடுக்கப்பட்ட லிங்கை, ஒரு முறை கிளிக் பண்ணுங்க...!

https://www.npcil.nic.in/index.aspx

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Indian Atomic Energy Corporation has issued notification that eligible persons can apply for 53 vacant posts in Kalpakkam Nuclear Power Project.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+