பல குறைபாடுகள் உள்ள நபர்களுக்கு அதிகாரமளிப்பதற்கான தேசிய நிறுவனத்தில் (NIEPMD) துணைப் பதிவாளர் (Deputy Registrar -Admin) பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் டெபுடேஷன், ஒப்பந்த (Deputation / Contract Basic) முறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதியும், திறமையும் உள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் அடையலாம்.
பல ஊனமுற்ற நபர்களுக்கான தேசிய நிறுவனம் ( NIEPMD ) என்பது பல்வேறு குறைபாடுகள் உள்ள நபர்களுக்கு சேவைகளை வழங்கும் ஒரு மத்திய அரசு நிறுவனம் ஆகும் . இது சென்னையில் உள்ள மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் உள்ள ஊனமுற்றோர் விவகாரத் துறையின் கீழ் நிறுவப்பட்டது .
இது மறுவாழ்வு நிபுணர்களுக்கு பயிற்சி அளிக்க மனிதவள மேம்பாட்டுத் திட்டங்களை நடத்துகிறது. இந்த நிறுவனம் பிசியோதெரபி , பேச்சு சிகிச்சை , தொழில் சிகிச்சை , உளவியல் தலையீடு , தொழில் பயிற்சி மற்றும் சிறப்புக் கல்வி போன்ற சேவைகளை வழங்குகிறது . பல குறைபாடுகள் உள்ளவர்களுக்காக பிரத்யேகமாக அர்ப்பணிக்கப்பட்ட இந்த நிறுவனம் ஆசியாவிலேயே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பெருமை வாய்ந்த என்ஐஇபிஎம்டி (NIEPMD) நிறுவனத்தில்தான் தற்போது துணைப் பதிவாளர் (Deputy Registrar -Admin) பணியிடம் காலியாக உள்ளது. விளம்பரம் வந்த 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
கல்வித்தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியங்களில் ஏதேனும் ஒரு பட்டமேற்படிப்பு (Master Degree) தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
அனுபவம்:
துணைப்பதிவாளர் (Deputy Registrar (Admin) பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய துறைகளில் Level - 10 என்ற ஊதிய அளவின் கீழ்வரும் பதவிகளில் குறைந்தபட்சம் 5 வருடங்கள் பணியாற்றிய அனுபவம் உள்ளவராகவும் இருக்க வேண்டும்.
வயதுத்தகுதி:
இந்த NIEPMD நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அதிகபட்சம் 56 வயது முதல் 62 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
மாத ஊதியம்:
இப்பணிக்கு டெபுடேஷன் (Deputation) முறைப்படி தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு பே மேட்ரிக்ஸ் லெவல்-11-ன் படியும் (Pay Matrix Level - 11) ஒப்பந்த (Contract) முறைப்படி தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.75,000/- என்றும் மாத ஊதியமாக தரப்படும்.
தேர்வு செய்யும் விதம்:
துணைப்பதிவாளர் (Deputy Registrar -Admin) பணிக்கு பொருத்தமான நபர்கள் Deputation / Contract விதிமுறைப்படியும், நேர்முக தேர்வு (Interview) மூலமும் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்:
விண்ணப்பம் அனுப்ப எஸ்சி, எஸ்டி, பிடபிள்யூபிடி, மகளிர் (SC / ST / PWBD / Women) ஆகியோர் விண்ணப்ப கட்டணம் கிடையாது
மற்ற நபர்கள் ரூ.500/- செலுத்தவேண்டும்.
விண்ணப்பிக்கும் விதம்:
இந்த NIEPMD நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் தரப்பட்டுள்ள முகவரிக்கு அறிவிப்பு வெளியான 30 நாட்களுக்குள் தபால் செய்ய வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு https://niepmd.tn.nic.in/documents/EmpNotice_06(R)23_131223.pdf என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்..


Click it and Unblock the Notifications












