மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கூட்டுறவு நிறுவனத்தில் (NIACL) காலியாக உள்ள Administrative Officer பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 300 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணிடயிடங்களுக்கு ரூ.60 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உடையோர் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

மேலாண்மை : New India Assurance Company Limited (NIACL)
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடம் : 300
பணி : Administrative Officer
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஓர் துறையில் இளநிலை, முதுநிலைப் பட்டம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 21 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : இப்பணியிடத்திற்கு தேர்வு செய்யப்படுவோருக்கு ரூ.60,000 மாத ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.newindia.co.in எனும் இணையதளத்தின் மூலம் 01.09.2021 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் :
- பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.600
- எஸ்.சி, எஸ்டி உள்ளிட்ட இதர விண்ணப்பதாரர்களுக்கு ரூ.100
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.newindia.co.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.


Click it and Unblock the Notifications












