ரூ.2.15 லட்சம் மாத சம்பளத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை...

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் (NHAI) பொது மேலாளர் (General Manager -Finance) பணியிடம் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்பித் தரலாம். கூடுதல் விவரங்களை
https://nhai.gov.in/#/vacancy-detail/6MrrZ+CrprF6ri3AAHWXYw== என்ற இணையதள லிங்க்கை கிளிக் செய்து காண முடியும்.

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் என்பது இந்திய தேசிய நெடுஞ்சாலைகளின் வளர்ச்சி மற்றும் பராமரிப்பிற்காக ஏற்படுத்தப்பட்ட தன்னாட்சியுடைய ஓர் இந்திய அரசு நிறுவனமாக உள்ளது.
இது 70,548 கி.மீ நீளமுள்ள நெடுஞ்சாலை வலையமைப்பை நாடு முழுவதும் பராமரித்து வருகிறது.
1988-ஆம் ஆண்டில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சட்டம், 1988 மூலம் இந்த நிறுவனம் நிறுவப்பட்டது. பிப்ரவரி, 1995-ல் இந்த ஆணையம் தன்னாட்சிநிலை அந்தஸ்தை பெற்றது.

ரூ.2.15 லட்சம் மாத சம்பளத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை...

இந்த நிறுவனம் 2000-ம் ஆண்டில் ஏராளமான பொருட்செலவில் தங்க நாற்கரச் சாலைத் திட்டம், கிழக்கு-மேற்கு மற்றும் தெற்கு- வடக்கு பெருந்தடவழிகளின் பகுதி மற்றும் முக்கிய துறைமுகங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைகள் திட்டத்தை உருவாக்கி சிறப்பாக செயல்படுத்தி பெயர்பெற்றது.

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தின் கீழ் இது அருமையான முறையில் பணியாற்றி வருகிறது.

இந்த ஆணையம் முழுநேரத் தலைவர் மற்றும் 5 முழு நேர உறுப்பினர்களுக்கு மிகாமல் மற்றும் 4 பகுதி நேர உறுப்பினர்களை கொண்டுள்ளது. அவர்கள் மத்திய அரசால் நியமிக்கப்படுகின்றனர். பகுதி நேர உறுப்பினர்கள் செயலாளர் (RT&H), செயலாளர் (செலவு), செயலாளர் (திட்டம்) மற்றும் DG (RD) & SS ஆவர்.

தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம்( NHAI) அதன் தலைமையகத்தில் தொழில்நுட்ப, நிதி, நிர்வாக மற்றும் விஜிலென்ஸ் பிரிவுகளைக் கொண்டுள்ளது. திட்ட இயக்குனர் தலைமையில் திட்ட செயலாக்க அலகுகள் (PIUs) பல்வேறு தொழில்நுட்ப மற்றும் கணக்கு அதிகாரிகள் ஆதரவுடன் திட்டங்களை சரியான நேரத்தில் முடிப்பதை மேற்பார்வையிட பல்வேறு தளங்களில் அமைக்கப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலை சுங்கவரி வசூல் செயல்முறையை மிகவும் திறமையானதாக்க, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) ஃபாஸ்டேக் (FASTag) என்ற புரட்சிகரமான தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது. மத்திய அரசாங்கத்தின் டிஜிட்டல் இந்தியா முன்முயற்சியின் ஒரு பகுதியாக, ஃபாஸ்டேக் (FASTag) 2016-ல் அறிமுகப்படுத்தப்பட்டது.

அதன் பின்னர் அது பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த மின்னணு கட்டண வசூல் அமைப்பு ரேடியோ அதிர்வெண் அடையாள (RFID) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுங்கச்சாவடிகளில் பணமில்லா கட்டணங்களைச் செயல்படுத்துகிறது.

வாகனத்தின் கண்ணாடியில் ஒரு சிறிய, முன்பணம் செலுத்திய குறிச்சொல்லைப் பொருத்தி, பயனரின் வங்கிக் கணக்கு அல்லது பணப்பையுடன் இணைப்பதன் மூலம், வாகனம் சுங்கச்சாவடியை அணுகும் போது, அதற்கான கட்டணத் தொகை தானாகவே பயனரின் கணக்கிலிருந்து கழிக்கப்படும். இது கோடிக்கணக்கான பயணிகளுக்கு சாலைப் பயணத்தை மிகவும் வசதியாகவும் திறமையாகவும் ஆக்கியுள்ளது.

இந்த சிறப்பு வாய்ந்த இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் தான் (NHAI) பொது மேலாளர் (General Manager -Finance) பணியிடம் காலியாக உள்ளது.

இந்தப் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி வரும் ஜனவரி 12-ம் ததி முதல் பிப்ரவரி 12-ம் தேதி வரையாகும்(12.01.2024 / 12.02.2024)

பொது மேலாளர் (General Manager) பணிக்கான கல்வித் தகுதி

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பி.காம்., பிசிஏ., ஐசிஏஐ, ஐசிடபிள்யூஏஐ, எம்பிஏ (B.Com, BCA, ICAI, ICWAI, MBA) பட்டம் பெற்றவராக இருந்தால் அவசியம் ாகும்.

அனுபவம்

மேலும், அரசு நிறுவனங்களில் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவுகளின் கீழ்வரும் பதவிகளில் 5 ஆண்டுகள் முதல் 14 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்களும் பொது மேலாளர்(General Manager-Finance) பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வயதுத் தகுதி

பொது மேலாளர் (General Manager -Finance) பணிக்கு 56 வயதுக்கு கீழுள்ள நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்

பொது மேலாளர் பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது லெவல் -13(Level - 13)-ன்படி, குறைந்தது ரூ.1,23,100/- முதல் அதிகபட்சம் ரூ.2,15,900/- வரை மாத ஊதியம் பெறுவார்கள்.

தேர்வு முறை

இந்த பொது மேலாளர் பணிக்கு பொருத்தமான நபர்கள் புரமோஷன்/டெபுடேஷன் (Promotion / Deputation) விதிமுறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் விதம்

இந்த பொது மேலாளர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் 12.01.2024 அன்றுக்குள் கீழே தரப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் பதிவு செய்த விண்ணப்பத்தின் நகலை எடுத்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 12.02.2024 அன்றுக்குள் தபாலில் அனுப்பித் தர வேண்டும்.

இந்தப் பணியிடம் தொடர்பான விளம்பர அறிவிப்பை

https://nhai.gov.in/nhai/sites/default/files/vacancy_files/Detailed_Adv_of_GM_Finance_Nov_2023.pdf என்ற இணையதள லிங்க்கை கிளிக் செய்து பெறலாம்.

கூடுதல் விவரங்களை https://nhai.gov.in/#/vacancy-detail/6MrrZ+CrprF6ri3AAHWXYw== என்ற இணையதள லிங்க்கை கிளிக் செய்து காண முடியும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
National Highways Authority of India has released the Job Advertisement for the hiring of 1 General Manager (Finance) Posts. Candidates who want to apply Online application form can visit the official website at nhai.gov.in. Check eligibility criteria and other details on this page before filling the General Manager (Finance) application form.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+