இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் (NHAI) டெபுடி டைரக்டர் (Deputy Manager -Technical) பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது. தகுதியும், ஆர்வமுள்ளவர்கள் 15.02.2024 க்குள் இதற்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். கூடுதல் விவரங்களுக்கு https://nhai.gov.in/nhai/sites/default/files/vacancy_files/Detailed_Advertisement.pdf என்ற இணையதள லிங்க்கைக் கிளிக் செய்து அறியலாம்.
இந்த சிறப்பு வாய்ந்த இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில்தான் (NHAI) டெபுடி டைரக்டர் (Deputy Manager -Technical) பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது
ஆணையத்தில் தற்போது டெபுடி டைரக்டர் (Deputy Manager-Technical) பதவிக்கு என மொத்தம் 60 பணியிடங்கள் காலியாக உள்ளன.
தேசிய நெடுஞ்சாலை ஆணைய பணியிடங்களுக்கான கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து சிவில் இன்ஜினியரிங் பிரிவில் (Degree in Civil Engineering) பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மத்திய/மாநில அரசு/பொதுத்துறை நிறுவனங்கள்/தன்னாட்சி அமைப்புகளில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.

தேசிய நெடுஞ்சாலை ஆணைய பணியிடங்களுக்கான வயது வரம்பு:
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகலாம்.
சம்பள விவரம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு ரூ.15,600-39,100/- ஊதியம் வழங்கப்படும்.
:
விண்ணப்பிப்பது எப்படி...
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் http://www.nhai.gov.in என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த மத்திய அரசு பணிக்கு 15.02.2024க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இணையதள முகவரி:
கூடுதல் விவரங்களுக்கு https://nhai.gov.in/nhai/sites/default/files/vacancy_files/Detailed_Advertisement.pdf என்ற இணையதள லிங்க்கைக் கிளிக் செய்து அறியலாம்.
விண்ணப்ப டவுன்லோடு:
விண்ணப்பங்களை
https://nhai.gov.in/#/vacancy-detail/09FgdxLpsJ4dGpZStzdtoQ== என்ற இணையதள லிங்க் மூலம் டவுன்லோடு செய்துகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications












