அதிக சம்பளத்தில் தேசிய உர நிறுவனத்தில் வேலை ரெடி....!!!!

தேசிய உர நிறுவனத்தில் (National Fertilizers Limited - NFL) தற்போது மேனேஜர், இன்ஜினியர், சீனியர் கெமிஸ்ட், அக்கவுன்ட்ஸ் ஆபீஸர், மெடிக்கல் ஆபீஸர் (Manager, Engineer, Senior Chemist, Accounts Officer, Medical Officer) போன்ற பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை ஆன்-லைனில் அனுப்புவதற்கு https://careers.nfl.co.in/ என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

தேசிய உர நிறுவனமானது நேஷனல் ஃபெர்டிலைசர்ஸ் லிமிடெட் (NFL) என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. மத்திய அரசால் திறம்பட நடத்தப்படும் பொதுத்துறை நிறுவனமாக அமைந்துள்ளது. 2022-ம் ஆண்டு வெளியிட்டுள்ள தகவல்களின்படி இந்தியாவில் அரசாங்கத்துக்கு சொந்தமான மிகப்பெரிய யூரியா உர உற்பத்தி செய்யும் நிறுவனமாக தேசிய உர நிறுவனம் அமைந்துள்ளது.

1974-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனமானது, மத்திய ரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் திறம்பட செயல்பட்டு வருகிறது. மேலும் இந்தியாவின் முக்கிய உரமான யூரியாவின் இரண்டாவது பெரிய உற்பத்தியாளராக அமைந்துள்ளது.

இந்திய விவசாயிகளின் முதுகெலும்பு போன்று செயல்பட்டு வரும் இந்த நிறுவனம் ரசாயன உரங்களை தயாரித்து அவர்களுக்கு செவ்வனே வழங்கி வருகிறது. அம்மோனியா-யூரியா ஆலைகளை பஞ்சாபில் உள்ள நங்கல் மற்றும் பதிண்டா, ஹரியாணாவில் பானிபட், மத்திய பிரதேசத்தின் விஜய்ப்பூரில் (2 ஆலைகளை) அமைத்து செயல்பட்டு வருகிறது.

அதிக சம்பளத்தில் தேசிய உர நிறுவனத்தில் வேலை ரெடி....!!!!

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவை தலைமையிடமாகக் கொண்டு தேசிய உர நிறுவனம் செயல்பட்டு வருகிறது. 1984 -ஆம் ஆண்டில், மத்திய பிரதேசத்தின் குனா மாவட்டத்தில் 7,26,000 டன் யூரியா திறன் கொண்ட நாட்டின் முதல் உள்நாட்டு எரிவாயு அடிப்படையிலான உரத் தொழிற்சாலையை செயல்படுத்தும் பொறுப்பை தேசிய உர நிறுவனத்திடம் மத்திய அரசு ஒப்படைத்தது.

இந்தத் தொழிற்சாலையில் வணிகரீதியான உற்பத்தி 1988-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் தொடங்கியது. இதன்பின்னர் விஜய்ப்பூரில் 2-வது ஆலை தொடங்கப்பட்டது. 1997-ம் ஆண்டு இதன் உற்பத்தித் திறன்1.45 மில்லியன் டன்களாக இரட்டிப்பாக்கப்பட்டது. லாபகரமான செயல்பாடு காரணமாக மத்திய அரசின் மினி-நவரத்னா அந்தஸ்து இந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. 2001-ஆம் ஆண்டில், மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தை (நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்) ஆகியவற்றில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது.

இந்த பெருமைவாய்ந்த தேசிய உர நிறுவனத்தில்தான் தற்போது மேனேஜர், இன்ஜினியர், சீனியர் கெமிஸ்ட், அக்கவுன்ட்ஸ் ஆபீஸர், மெடிக்கல் ஆபீஸர் (Manager, Engineer, Senior Chemist, Accounts Officer, Medical Officer) போன்ற பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.மேனேஜர் பிரிவில் (Manager) 2 பணியிடங்களும், இன்ஜினீயர் பிரிவில் (Engineer) 5 பணியிடங்கள்,

சீனியர் கெமிஸ்ட் பிரிில் (Senior Chemist) 1 பணியிடமும்
அக்கவுன்ட்ஸ் ஆபீஸர் பிரிவில் (Accounts Officer) 2 பணியிடங்களும்,
மெடிக்கல் ஆபீஸர் பிரிவில் (Medical Officer) 2 பணியிடங்களும்,
டிரான்ஸ்பர்ட்டேஷன் பிரிவில் (Transportation Officer) 1 பணியிடமும்
அசிஸ்டெண்ட் மேனேஜர் பிரிவில் (Assistant Manager) 3 பணியிடங்களும்,
சீனியர் மேனேஜர் பிரிவில் (Senior Manager) 1 பணியிடமும் காலியாக உள்ளன.

கல்வித்தகுதி:

பிஇ, பி.டெக், பி.எஸ்சி, எம்.எஸ்சி, சிஏ, ஐசிடபிள்யூஏ, சிஎம்ஏ, எம்பிஏ, பிஜிடிஎம், பிஜிடிபிஎம், எம்பிபிஎஸ் (BE, B.Tech, B.Sc, M.Sc, CA, ICWA, CMA, MBA, PGDM, PGDBM, MBBS ) ஆகிய பட்டப்படிப்புகளில் ஏதேனும் ஒன்றை அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் முடித்தவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது..

வயதுத்தகுதி:

Manager / Senior Manager பணிகளுக்கு 18 வயது முதல் 45 வயது எனவும், Engineer / Senior Chemist / Accounts Officer / Medical Officer / Transportation Officer பணிகளுக்கு 18 வயது முதல் 30 வயது எனவும்,
Assistant Manager பணிக்கு 18 வயது முதல் 40 வயது எனவும் வயது வரம்பானது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சம்பள விவரம்:

இப்பணிகளுக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.40,000/- முதல் ரூ.2,20,000/- வரை மாத ஊதியமாக பெறுவர்.

தேர்வு முறை:

இந்த என்எஃப்எல்(NFL) நிறுவன பணிகளுக்கு தகுதியான நபர்கள் நேர்முகத் தேர்வு (Personal Interview) மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்ப கட்டணம்:

Senior Manager பணிகளுக்கு ரூ.1000/-, மற்ற பணிகளுக்கு ரூ.700/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்தவேண்டும்.

மேலும், SC / ST / PwBD / ExSM பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் இப்பதிவின் இறுதியில் குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். 19.1.2024 என்ற கடைசி நாளுக்குள் பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
கூடுதல் விவரங்களுக்கு https://careers.nfl.co.in/uploads/upload_datails_doc/Detailed Advertisement.pdf என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொண்டு அறியலாம்.

விண்ணப்பத்தை ஆன்-லைனில் அனுப்புவதற்கு https://careers.nfl.co.in/ என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
National Fertilizers Limited (NFL) is currently searching for skilled and qualified candidates for the positions of Engineer (Production), Engineer (Mechanical), Engineer (Instrumentation), Sr. Chemist (Chemical Lab), Accounts Officer, Medical Officer (Medicine), Medical Officer (Paediatrics), Transportation Officer, Assistant Manager (Marketing), Manager (Production), Manager (Mechanical) and Senior Manager (HR). Referring to the official notification of NFL Recruitment 2023, the applicant’s age limits for the mentioned posts must be between 18 to 45 years.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+