மத்திய அரசிற்கு உட்பட்ட தேசிய இரசாயன ஆய்வகத்தில் காலியாக உள்ள Scientist, Sr. Scientist உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 20 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.2 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தேசிய இரசாயன ஆய்வகம் (NCL)
மேலாண்மை : மத்திய அரசு
பணி மற்றும் காலிப் பணியிடங்கள்:
- Scientist - 10
- Sr. Scientist - 04
- Principal Scientist - 06
மொத்த காலிப் பணியிடம் : 20
கல்வித் தகுதி :
அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் பி.எச்டி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும், சம்பந்தப்பட்ட துறையில் R&D பணியில் மூன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 32 முதல் 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் :
- Scientist - ரூ.1,16,398
- Sr. Scientist - ரூ.1,33,936
- Principal Scientist - ரூ.2,03,930
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://recruit.ncl.res.in அல்லது கீழே இணைக்கப்பட்டுள்ள இணைய முகவரியின் மூலம் 10.03.2022 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், அதனை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து 21.03.2022 தேதிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் அஞ்சல் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்பப் படிவம் : இங்கே கிளிக் செய்யவும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://recruit.ncl.res.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












