புதுச்சேரியின் காரைக்காலில் அமைந்துள்ள உள்ள என்.ஐ.டி., உயர்கல்வி நிறுவனத்தில் உள்ள பல்வேறு காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை அறிந்துகொள்ள nitpy.ac.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.
இந்த பெருமைவாய்ந்த என்.ஐ.டி., உயர்கல்வி நிறுவனத்தில் தான் தற்போது பணியிடங்கள் காலியாக அமைந்துள்ளன.
தற்போது இங்கு டெக்னீசியன் 14, டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 8, ஆய்வக உதவியாளர் 7, ஜூனியர் அசிஸ்டென்ட் 5, அலுவலக உதவியாளர் 4, உதவி பதிவாளர் 2, சீனியர் டெக்னீசியன் 2, சீனியர் அட்டன்டென்ட் 2, பெர்சனல் அசிஸ்டென்ட் 2 பணியிடங்கள் உட்பட என மொத்தம் 55 இடங்கள் உள்ளன.
என்.ஐ.டி., உயர்கல்வி நிறுவன பணியிடங்களுக்கான கல்வித்தகுதி: டெக்னீசியன் பணிக்கு பிளஸ் 2 அறிவியல் குரூப், மற்ற பணிக்கு பிரிவு வாரியாக மாறுபடும்.

என்.ஐ.டி., உயர்கல்வி நிறுவன பணியிடங்களுக்கான வயது விவரம்: 25.3.2023 அடிப்படையில் பிரிவை பொறுத்து 27, 30, 35 வயதுக்குள் இருக்க வேண்டும். தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் மட்டுமே இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கவேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்: விண்ணப்பக்கட்டணமாக ரூ. 500 செலுத்தவேண்டும். பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவை இல்லை
கடைசிநாள்: விண்ணப்பங்களை வரும் 25.3.2024-ம் தேதிக்குள் அனுப்பித் தரவேண்டும்.
இணையதள முகவரி : கூடுதல் விவரங்களை அறிந்துகொள்ள nitpy.ac.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications












