மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான தேசிய கைத்தறி மேம்பாட்டுக் கழகத்தில் (NHDC) காலியாக உள்ள ஆலோசகர், மூத்த ஆலோசகர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ரூ.1.25 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்குக் கல்வித் தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விபரங்களைக் காணலாம் வாங்க.
NHDC பணியிடங்கள் :
NHDC எனும் தேசிய கைத்தறி மேம்பாட்டு கழகத்தின் சார்பில் தற்போது Young Professional - 08, ஆலோசகர் - 02, மூத்த ஆலோசகர் - 02 என மொத்தம் 12 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
NHDC வயது வரம்பு:
மேற்கண்ட பணிகளுக்கு விதிமுறைகளிப்டி வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, Young Professional பணிக்கு 35 வயதிற்கு உட்பட்டும், ஆலோசகர் பணிக்கு 50 வயதிற்கு உட்பட்டும், மூத்த ஆலோசகர் பணிக்கு 58 வயதிற்கு உட்பட்டும் இருக்க வேண்டும்.
NHDC கல்வித் தகுதி:
தேசிய கைத்தறி மேம்பாட்டுக் கழகத்தில் (NHDC) நிரப்பப்பட உள்ள இப்பணிகளுக்குத் தனித் தனியே கல்வித் தகுதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. LLB/ CA/ ICWA/ PG Diploma/ MBA அல்லது ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மேலும், பதவிக்கு ஏற்ப குறைந்தது 2 ஆண்டுகள் முதல் 25 ஆண்டுகள் வரையில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
NHDC ஊதியம்:
NHDC சார்பில் தேர்வு செய்யப்படுவோருக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1.25 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. Young Professional பணிக்கு ரூ.50,000 ஊதியமும், ஆலோசகர் பணிக்கு ரூ.80,000 ஊதியமும் மற்றும் மூத்த ஆலோசகர் பணிக்கு ரூ.1,25,000 லட்சம் ஊதியமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட (NHDC) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://nhdc.org.in/upload/NHDC_Vacancy_Circular_for_Website31032021.pdf எனும் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேசிய கைத்தறி மேம்பாட்டுக் கழகத்தின் nhdc.org.in எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியில் 20.04.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்பம் - இங்கே கிளிக் செய்யவும்.
தேர்வு முறை :
விண்ணப்பதாரர் நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்டவற்றின் மூலமாகத் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும் விபரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.
NHDC பணியிட விபரங்களுக்கு:
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் விரும்புவோர் nhdc.org.in அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கைக் காணவும்.


Click it and Unblock the Notifications












