மத்திய பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான தேசிய அலுமினியம் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் (NALCO) காலியாக உள்ள Advisor(Land) பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.80 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு பணிக்கு தொடர்புடைய பிரிவில் பட்டம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட் (NALCO)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : Advisor(Land)
மொத்த காலிப் பணியிடங்கள் : 01
கல்வித் தகுதி :
அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் இளநிலை அல்லது முதுநிலை பட்டங்கள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும், Diploma in Management மற்றும் Law-வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதியம் : ரூ.60,000 முதல் ரூ.80,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : கீழே இணைக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை : மேற்குறிப்பிட்ட பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.nalcoindia.com அல்லது கீழே இணைக்கப்பட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 28.02.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.nalcoindia.com அல்லது கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












