மத்திய அரசின் வனத்துறையின் கீழ் காலியாக உள்ள ஸ்பெஷல் டூட்டி ஆபீஸர் (Special Duty Officer) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள்துறை அமைச்சகத்தின் (MOEF) கீழ் இந்தப் பணியிடம் நிரப்பப்படுகிறது. தகுதியும், விருப்பம் உள்ள நபர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.கூடுதல் விவரங்களுக்கு https://moef.gov.in/wp-content/uploads/2023/11/Circular-OSD-CEC-MoEFCC.pdf என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறிந்துகொள்ளலாம்.
மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் அமைச்சகம் (இந்தியா) (Minstry of Environment and Forests), சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது.இந்த அமைச்சகமே இந்தியாவின் சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் பருவநிலை மாற்றங்களை கவனிக்கும் இந்திய அரசின் உச்சகட்ட அமைப்பாகும். இந்த அமைச்சகம் 1985ல் ஏற்படுத்தப்பட்டது.
இந்த அமைச்சகத்தின் பொறுப்பானது இந்தியாவில் சுற்றுச்சூழல் மற்றும் வனத் திட்டங்களை திட்டமிடுவதும், ஊக்குவிப்பதும், ஒருங்கிணைப்பதும், மேற்பாடுவையிவதாகும். இந்த அமைச்சகத்தின் முக்கியப் பணியானது, இந்திய வனங்களில் உள்ள தாவர வகைகள் மற்றும் வனவிலங்குகளை கணக்கெடுப்பதும், பாதுகாப்பது, மேலும் மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு; காடு வளர்ப்பு, மற்றும் நில சீரழிவு தணிப்பு ஆகியன்வாகும். இதுவே இந்தியாவின் தேசிய பூங்காக்கள் நிர்வகிக்கும் பொறுப்பு உடையதாகும்.

அகில இந்தியப் பணிச்சேவைகளூள் ஒன்றான, இந்திய வனப் பணி (IFS) சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சின் நிர்வாகம் மற்றும் கண்காணிப்பின் கீழ் உள்ளது.
இந்த பெருமைமிகு மத்திய அரசின் வனத்துறையின் கீழ்தான் தற்போது ஸ்பெஷல் டூட்டி ஆபீஸர் (Special Duty Officer) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஸ்பெஷல் டூட்டி ஆபீஸர் (Special Duty Officer) பணியிடங்களுக்கான தகுதி
ஸ்பெஷல் டூட்டி ஆபீஸர் (Special Duty Officer) பணியிடங்களுக்கு அரசு நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் Level - 12 (Pre-revised GP Rs.7600/- in PB - 3) என்ற ஊதிய அளவின் கீழ்வரும் டெபுடி செக்கரட்டரி (Deputy Secretary) பதவியில் போதிய ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
ஸ்பெஷல் டூட்டி ஆபீஸர் (Special Duty Officer) பணியிடங்களுக்கு வயதுத்தகுதி:
ஸ்பெஷல் டூட்டி ஆபீஸர் (Special Duty Officer) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 62 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.
ஸ்பெஷல் டூட்டி ஆபீஸர் (Special Duty Officer) பணியிடங்களுக்கு மாத சம்பளம்:
ஸ்பெஷல் டூட்டி ஆபீஸர் (Special Duty Officer) பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்கள் எம்ஓஇஎஃப்(MOEF ) விதிமுறைப்படி மாத சம்பளம் பெறுவார்கள்.
தேர்வு செய்யும் விதம்:
ஸ்பெஷல் டூட்டி ஆபீஸர் (Special Duty Officer) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் விதம்:
ஸ்பெஷல் டூட்டி ஆபீஸர் (Special Duty Officer) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் 15.1.2024 என்ற இறுதி நாளுக்குள் தங்களது விண்ணப்பத்தை தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் தரப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு https://moef.gov.in/wp-content/uploads/2023/11/Circular-OSD-CEC-MoEFCC.pdf என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறிந்துகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications












