மத்திய உள்துறை அமைச்சகத்தில் (MHA) காலியாக உள்ள மூத்த கண்காணிப்பாளர், ஆலோசகர், Data Analyst உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 20 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.60 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணிகளுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : மத்திய உள்துறை அமைச்சகம் (MHA)
பணி : Chief Supervisor, Consultant, Data Analyst, Supervisor, Consultant மற்றும் Surveyor
மொத்த காலிப் பணியிடங்கள் : 20
கல்வித் தகுதி :
10, 12-வது தேர்ச்சி பெற்று அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் இளநிலைப் பட்டம், BBA, MBA, முதுநிலைப் பட்டம் என ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும், பணியில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 65 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.20,000 முதல் அதிகபட்சம் ரூ.60,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 30.11.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணிடயம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.mha.gov.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












