மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான மகாநதி கோல் இந்தியா (MCL) நிறுவனத்தில் காலியாக உள்ள மூத்த மருத்துவ அதிகாரி மற்றும் மூத்த சிறப்பு மருத்துவ அதிகாரி பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 70 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.2 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : மகாநதி கோல் இந்தியா நிறுவனம் (MCL)
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடங்கள் : 70
பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:
- Sr. Medical Specialist - 40
- Sr.Medical Officer - 28
- Sr.Medical Officer (Dental) - 02
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ், டிஎன்பி போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 35 முதல் 42 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : இப்பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ.60,000 முதல் ரூ.2,00,000 வரையில் ஊதியம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.mahanadicoal.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து [email protected] என்னும் மின்னஞ்சல் முகவரிக்குக் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.mahanadicoal.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












