ரூ.2 லட்சம் ஊதியம்! சென்னைப் பல்கலைக் கழகத்தில் பணியாற்ற ஆசையா?

சென்னைப் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள பேராசிரியர், உதவிப் பேராசிரியர் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் 27ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.2 லட்சம் ஊதியம்! சென்னைப் பல்கலைக் கழகத்தில் பணியாற்ற ஆசையா?

 

நிர்வாகம் : சென்னைப் பல்கலைக் கழகம்

பணி : உதவிப் பேராசிரியர், இணைப் பேராசிரியர், பேராசிரியர்

மொத்த காலிப் பணியிடங்கள் : 32

துறைவாரியான பணியிட விபரங்கள் :

வேதியியல், மானிடவியல், இந்திய வரலாறு, தெற்கு மற்றும் தெற்கு கிழக்கு ஆசிய ஆய்வுகள், கனிம வேதியியல், புவியியல், இந்திய இசை, உளவியல், பொருளாதாரம், தத்துவம், அரசியல் மற்றும் பொது நிர்வாகம், உயிர் வேதியியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கல்வித் தகுதி : மேலே குறிப்பிடப்பட்டுள்ள துறைகளில் யுஜிசி விதிமுறைப்படி தகுதி பெற்று பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் கல்வித்தகுதியின் அடிப்படையில் தகுதியானவர்கள் நேர்முகத் தேர்விற்கு அழைக்குப்படுவர். இதனைத்தொடர்ந்து, நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.500
  • மற்ற பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு ரூ.250

விண்ணப்பக் கட்டணம் செலுத்தும் முறை : கட்டணத்தை ஆன்லைன் அல்லது வங்கி டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.unom.ac.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்கண்ட அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி : The Registrar, University of Madras, Chepauk, Chennai - 600 005.

 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 27.01.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.unom.ac.in/webportal/uploads/miscelloneous/appointments/instructions.pdf என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Madras University Recruitment 2020: Apply online for Assistant Professors and Professors Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X