சென்னையில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில்(ஐ.ஐ.டி.) பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்களிடமிருந்து இந்தப் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கூடுதல் விவரங்களைப் பெற recruit.iitm.ac.in என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்யலாம்.
மெட்ராஸ் ஐஐடி என்று அழைக்கப்படும் இந்த இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை (மெட்ராஸ் ஐஐடி-Indian Institute of Technology Madras) தென்னிந்தியாவில் சென்னையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியாகும். மத்திய அரசினால் தேசிய இன்றியமையாக் கழகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்தியாவின் தலைசிறந்த கல்விக்கூடங்களில் ஒன்றாக இது திகழ்கிறது. 1959-ம் ஆண்டு அப்போதைய மேற்கு ஜெர்மனி அரசின் பணஉதவி மற்றும் நுட்ப உதவியுடன் இது நிறுவப்பட்டது.
இந்திய நாடாளுமன்றத்தின் ஆணையால் நிறுவப்பட்ட மற்றும் நாட்டின் இன்றியமையாத கல்விக்கழகங்கள் என அறிவிக்கப்பட்ட, பொறியியல் மற்றும் நுட்பக்கல்வியில் சிறப்பான உயர்கல்வி நோக்கம் கொண்ட பதினைந்து தன்னாட்சி வழங்கப்பட்ட தொழில்நுட்ப கழகங்களில் மூன்றாவதாக இது நிறுவப்பட்டது.
இந்த மெட்ராஸ் ஐஐடி-யிலிருந்து ஏராளமான விஞ்ஞானிகள், நிபுணர்கள், பேராசிரியர்கள் உருவாகியுள்ளனர். அவர்கள் உலகத்தின் பல்வேறு நிறுவனங்களில் மிகவும் உயர்பதவிகளில் பணியாற்றி வருகின்றனர்.

இந்த மெட்ராஸ் ஐஐடி-யில்தான் தற்போது ஜூனியர் டெக்னிக்கல் சூப்பரென்டன்ட் 12 (உயிரியல் 1, வேதியியல் 2, கம்ப்யூட்டர் சயின்ஸ் 1, எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் 1, இன்ஸ்ட்ருமென்டேசன் 5, எலக்ட்ரிக்கல் 1, மெக்கானிக்கல் 1), டெக்னிக்கல் ஆபிசர் 8 (ஐ.டி., 2, எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் 1, எலக்ட்ரிக்கல் 1, மெக்கானிக்கல் 4) என மொத்தம் 20 காலி இடங்கள் உள்ளன.
மெட்ராஸ் ஐஐடி பணியிடங்களுக்கான கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்., முடித்திருக்க வேண்டும். மேலும் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க குறைந்தது 5 ஆண்டு பணி அனுபவம் அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெட்ராஸ் ஐஐடி பணியிடங்களுக்கான வயதுத்தகுதி: 24.4.2024 -ம் தேதி அடிப்படையில் டெக்னிக்கல் ஆபீஸர் 45, சூப்பரென்டன்ட் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகையும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
தேர்ச்சி முறை: மெட்ராஸ் ஐஐடி பணியிடங்களுக்கு எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு என்ற அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: மெட்ராஸ் ஐஐடி வேலைக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பம் செய்யவேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்: மெட்ராஸ் ஐஐடி பணியிடங்களுக்கு விண்ணப்பக்கட்டணமாக ரூ. 500 செலுத்தவேண்டும். பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினர் விண்ணப்பக்கட்டணம் செலுத்த வேண்டிய தேவை இல்லை.
கடைசிநாள்: இந்தப் பணியிடங்களுக்கு 24.4.2024 மாலை 5:30 மணிக்குள் விண்ணப்பங்களை அனுப்பித் தரவேண்டும்.
இணையதள முகவரி: கூடுதல் விவரங்களைப் பெற recruit.iitm.ac.in என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்யலாம்.


Click it and Unblock the Notifications












