மத்திய அரசின் LIC எனும் ஆயுள் காப்பீட்டு கழகத்தில் காலியாக உள்ள Chief Financial Officer பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஒரே ஒரு பணியிடம் மட்டுமே உள்ள நிலையில் இப்பணியிடத்திற்கு ஆண்டிற்கு ரூ.75 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : LIC ஆயுள் காப்பீட்டு கழகம்
பணி : Chief Financial Officer
மொத்த காலிப் பணியிடங்கள் : 01
கல்வித் தகுதி :
அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் Chartered Accountant தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் FRM Certification/ CFA / MBA (F) முடித்தவர்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
மேலும், Financial Operations, Taxation Matters பணிகளில் 15 ஆண்டுகள் வரையில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 01.09.2021 தேதியின்படி 45 முதல் 57 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.75 லட்சம் வரையில் ஆண்டிற்கு ஊதியம் வழங்கப்படும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 12.10.2021 தேதிக்குள் [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர் Shortlisting, Interaction மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://licindia.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












