அட போங்க பாஸ்...! இப்படி தான் சொல்லுவீங்க... ஆனா பார்த்தா, காலிப் பணியிடங்கள் பத்து தான் இருக்கும்னு நீங்க கேட்கிறது காதில விழுந்துட்டு... கவலைப்படாதீங்க...
மொத்த 80 பணியிடங்களுக்கான அறிவிப்பை, எல்.ஐ.சி., என்று அழைக்கப்படும் இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் வெளியிட்டுள்ளது.

இரண்டு நாள் தான் இருக்கு...!
ஆனா ஒரே விஷயத்தை மறக்காதீங்க... இன்னும் இரண்டு நாள் தான் இருக்கு... இப்பணியிடங்களுக்கு ஆன்லைனில் 25.08.2022 தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.
பதறாதீங்க... ஆன்லைன் என்பதால் ஈஸி டாஸ்க் தான். போய் உடனே விண்ணப்பிக்கும் வேலையை பாருங்க சார்...!
நிர்வாகம்: இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம்(LIC)
மேலாண்மை: மத்திய அரசு
காலியிடங்கள்: 80
பதவியின் பெயர் - உதவியாளர், உதவி மேலாளர்(Assistant, Assistant Manager )
விண்ணப்பிக்க கடைசி தேதி : ஆகஸ்ட் 28
சம்பளம்
· உதவியாளர் - ரூ.22,730
· உதவி மேலாளர் - ரூ.53,620
பணியிடங்கள் எண்ணிக்கை
· உதவியாளர் - 50
· உதவி மேலாளர் - 30
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
கல்வி தகுதி, வயது வரம்பு
· உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்ட படிப்பு 55% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
· உதவி மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஏதாவது ஒரு பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
· Marketing/Finance பிரிவில், MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
· இப்பணியில், DME பிரிவுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு, 21லிருந்து 40 க்குள் இருக்க வேண்டும். உதவியாளர், உதவி மேலாளர் பணியிடங்களுக்கு 21லிருந்து 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு முறை
காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வு மற்றும் நேர்காணல் வாயிலாக மட்டுமே தெரிவு செய்யப்படுவர்.
கூடுதல் விவரங்களுக்கு, கீழே கொடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பை சொடுக்கி, தெரிந்து கொள்ளுங்கள்...!

விண்ணப்பிக்கும் முறை
'www.lichousing.com' என்ற இணையதளம் வாயிலாக, ஆன்லைனில் நிர்ணயிக்கப்பட்ட காலமான 25.08.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்
உதவியாளர், உதவி மேலாளர் பணியிடங்களுக்கு, ரூ.800 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. கட்டணத்தை ஆன்லைன் வாயிலாக செலுத்த வேண்டும்.
ஈஸியான வழிமுறை தெரிஞ்சுக்கோங்க...!
v LIC HFL - lichousing.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்துக்கு செல்லவும்.
v முகப்புப் பக்கத்தில் 'Careers' டேப்பில் சொடுக்கவும்.
v அறிவிப்பின் கீழ் தெரியும் 'Apply Online' என்ற இணைப்பை சொடுக்கி உள்ளே நுழையவும்.
v உள்ளே நுழைந்ததும், விண்ணப்பதாரர்கள் தங்களை முதலில் பதிவு செய்து கொண்டு விண்ணப்பிக்க வேண்டும். பெரியதாக ஒன்றுமில்லை. ஜி.மெயிலில் முதல் முதலாக கணக்கு தொடங்குவோம்ல அதே நடைமுறை தான். ஆனால் பயனர், கடவுச்சொல் குறியீட்டை நோட் பண்ணி வச்சுக்கோங்க....!
v விண்ணப்பப் படிவத்தை சரியாகப் பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களைப் பதிவேற்றவும்.
v விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி, படிவத்தைச் சமர்ப்பிக்கவும்.
v கடைசியாக படிவத்தை பதிவிறக்கம் செய்து, எதிர்கால பயன்பாட்டிற்காக பிரிண்ட் -அவுட் எடுத்து வைத்து கொள்ளுங்கள்.வயது வரம்பு, தளர்வு, பணி நடைமுறை, முக்கிய கட்டளைகள் ஆகிய விவரங்களும், அறிவிப்பில் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு முறை சொடுக்கி, கவனமாக படித்து பாருங்கள் மறக்காமல்; நிறைய தகவல்கள் வழங்கியிருக்காங்க...


Click it and Unblock the Notifications












