எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் (LIC Housing Finance Limited-LICHFL) நிறுவனத்தில் காலியாக உள்ள அப்ரென்டிஸ் (Apprentices) பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படவுள்ளன. இப்பணிக்கு விருப்பமும், தகுதியும் உள்ள நபர்களின் விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் அனுப்பலாம். மொத்தம் 250 அப்ரென்டிஸ் பணியிடங்கள் காலியாக உள்ளன.
கூடுதல் விவரங்களுக்கு https://www.lichousing.com/static-assets/pdf/Apprentecis Advertisement Notification LICHFL 2023.pdf?crafterSite=lichfl-corporate-website-cms&embedded=true என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.
எல்ஐசி எச்எப்எல் என்று அழைக்கப்படும் எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் (எல்ஐசி எச்எப்எல்) நிறுவனமானது இந்தியாவின் மிகப் பெரிய ஹவுசிங் ஃபைனான்ஸ் அடமானக் கடன் நிறுவனங்களில் ஒன்றாகும், அதன் பதிவு மற்றும் கார்ப்பரேட் அலுவலகம் மும்பையில் உள்ளது. LIC HFL என்பது இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியின் துணை நிறுவனமாகும்.
நிறுவனத்தின் முக்கிய நோக்கம், குடியிருப்பு நோக்கங்களுக்காக வீடுகள் அல்லது அடுக்கு மாடிகளை வாங்குவதற்கு அல்லது கட்டுவதற்கு தனிநபர்களுக்கு நீண்ட கால நிதியுதவி வழங்குவதாகும்; தற்போதுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வீடுகளை பழுது பார்த்தல் மற்றும் புதுப்பிக்கும் நோக்கத்திற்காகவும் நிறுவனம் நிதி அளிக்கிறது. வணிகம் மற்றும் தனிப்பட்ட தேவைகளுக்காக ஏற்கனவே உள்ள சொத்துக்களுக்கு நிதியுதவி அளிக்கிறது மற்றும் கிளினிக்குகள், நர்சிங் ஹோம்கள், நோயறிதல் மையங்கள், அலுவலக இடம் மற்றும் உபகரணங்களை வாங்குவதற்கு நிபுணர்களுக்கு கடன்களை வழங்குகிறது.

குடியிருப்பு நோக்கத்திற்காக வீடுகள் அல்லது அடுக்கு மாடிகளைக் கட்டும் தொழிலில் ஈடுபட்டுள்ள தனிநபர்களுக்கு நீண்ட கால நிதியுதவி அளிப்பதில் நிறுவனம் மிகவும் பிரபலமாக உள்ளது. ஜனவரி 2019 முதல் ஐடிபிஐ வங்கி லிமிடெட் நிறுவனத்தில் புரோமோட்டர் மற்றும் கன்ட்ரோலர் அந்தஸ்தை இந்தியாவின் எல்ஐசி கொண்டுள்ளது.
இந்த பெருமை வாய்ந்த எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தில் தான் (LIC Housing Finance Limited) தற்போது காலியாக உள்ள அப்ரென்டிஸ் (Apprentices) பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படவுள்ளன. எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தில் (LIC Housing Finance Limited) தற்போது 250 அப்ரென்டிஸ் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அப்ரென்டிஸ் (Apprentices) கல்வி விவரம்:
அப்ரென்டிஸ் (Apprentices) பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு (Graduate Degree) தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுத்தகுதி:
எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸின் (LICHFL) அப்ரென்டிஸ் (Apprentices) பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 1.12.2023 அன்றைய நாளின் படி, 20 வயது முதல் 25 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
அப்ரென்டிஸ் (Apprentices) பணிக்கான ஊக்கத்தொகை:
இந்த அப்ரென்டிஸ் (Apprentices) பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்கள் ரூ.9,000/- முதல் ரூ.15,000/- வரை மாத ஊக்கத்தொகையாக பெறுவர்.
தேர்வு செய்யும் முறை:
இந்த எல்ஐசிஎச்எப்எல் (LICHFL) நிறுவனத்தின் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நுழைவுத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத் தேர்வு (Entrance Exam, Document Verification, Personal Interview) ஆகிய தேர்வு முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் வழிமுறை:
அப்ரென்டிஸ் பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் 22.12.2023 அன்று முதல் 31.12.2023 அன்று வரை கீழே தரப்பட்டுள்ள இணைப்பில் உள்ள Google Form-யை முழுமையாக பூர்த்தி செய்து Online-ல் சமர்ப்பிக்க வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு https://www.lichousing.com/static-assets/pdf/Apprentecis Advertisement Notification LICHFL 2023.pdf?crafterSite=lichfl-corporate-website-cms&embedded=true என்ற இணையதள முகவரியைத் தொடர்பு கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications












