தேசிய காப்பீட்டு நிறுவனத்தின் (LIC) ஒரு பகுதியான ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தில் (LIC HFL) காலியாக உள்ள Direct Marketing Executive (DME) - Digital பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு பிரிவுகளில் இப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.20 ஆயிரம் மாத ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா, ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் (LIC HFL)
மொத்த காலிப் பணியிடங்கள் : பல்வேறு பிரிவுகளில் இப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
பணி : Direct Marketing Executive (DME) - Digital
கல்வித் தகுதி :
- அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும், 02 முதல் 03 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- Self-Driven, Good Computer Skills, Good Communication Skills, Passion for Sales போன்றவற்றில் திறன் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு : விண்ணப்பதாரர் 21 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.20,000 மாதம்
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.lichousing.com/submit_resume_dme.php எனும் இணையதளத்தின் மூலம் 22.09.2021 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு (ஆங்கிலம்) : இங்கே கிளிக் செய்யவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு (தமிழ்) : இங்கே கிளிக் செய்யவும்.
ஆன்லைன் விண்ணப்பப் படிவம் : இங்கே கிளிக் செய்யவும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.lichousing.com அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.


Click it and Unblock the Notifications












