Kanniyakumari Mega Job Fair 2023
கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் (கன்னியாகுமரி) இணைந்து நடத்தும், இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாமில், 1000க்கும் மேற்பட்ட இடங்களுக்கு தகுதியான ஆட்கள் சேர்ப்பு நடைபெறவுள்ளன.

மெகா ஆட்சேர்ப்பு முகாம் 2023
எங்கே....!
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் ஸ்காட்கல்லூரியில் மெகா வேலைவாய்ப்பு முகாம் காலை 9.00 மணி முதல் 3:00 மணி வரை நடைபெறுகிறது.
2 ஆயிரம் இடங்கள் ?
முகாமில் பங்கு பெறும் முன்னணி நிறுவனங்கள், தங்கள் நிறுவனத்தின் பல்வேறு துறைகளில், காலியாக உள்ள இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப உள்ளன.
பத்தாம் வகுப்பு முதல் பி.இ., வரை
இந்த முகாமில் பத்தாம் வகுப்பு படித்தவர்கள் முதல் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, வணிகம் மற்றும் பொறியியல் பட்டம் பெற்றவர்களும் பங்கேற்கலாம்.
சென்னை, கோவை, திருச்சி, கன்னியாகுமரி, காஞ்சிபுரத்தை சேர்ந்த நிறுவனங்கள் பங்குபெறும் இந்த மெகா வேலைவாய்ப்பு முகாமில் தேர்வாகும் நபர்கள் குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.25 ஆயிரம் ரூபாய் வரை ஊதியம் பெறுவர்.
இவ்வேலைவாய்ப்பு முகாமின் வாயிலாக, தனியார்துறையில் வேலைவாய்ப்பு பெறும் பயனாளிகளின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு விவரங்கள் ரத்து செய்யப்பட மாட்டாது.
மறக்காதீங்க...!
நேர்காணல் பிப்ரவரி 18 ஆம் தேதி சனிக்கிழமை காலை 9.00 மணிக்கே துவங்குகிறது. சீக்கிரம் போங்க... வேலைவாய்ப்பு ஆணையுடன் திரும்பி வாங்க....!
பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்விச் சான்றிதழ், ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்கள் மற்றும் சுய விவரக் குறிப்புடன் (Biodata) ஆகியவற்றை நேர்காணலின் போது, உடன் எடுத்து செல்ல வேண்டும்.
மெகா தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் பற்றிய விவரங்கள் அறிய கீழே உள்ள லிங்க்கை க்ளிக் பண்ணுங்க ப்ளீஸ்...
https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_jobfairlist_single/52302090007
https://www.tnprivatejobs.tn.gov.in/ViewData/jobfair_view/52302090007


Click it and Unblock the Notifications












