கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் காமராஜ் பாலிடேக்னிக் கல்லூரியில் காலியாக உள்ள Lecturer, HOD பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 17 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு 10-வது முதல் பி.இ, பி.எஸ்சி தேர்ச்சி பெற்றவர்கள் வரையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : காமராஜ் பாலிடெக்னிக் கல்லூரி
பணி : Lecturer, HOD மற்றும் பல பணிகளுக்கு காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
மொத்த காலிப் பணியிட விபரங்கள் : 17
கல்வித் தகுதி :
Lecturer (Engineering) - பி.எஸ்சி, பி.இ, பி.டெக் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Lecturer (Non-Engineering) - முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
HOD - முதுநைலிப் பட்டம், பி.எச்டி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Librarian - Library Science, Information Science, Documentation Science பாடங்களில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Physical Director - Physical Education துறையில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இளநிலை உதவியாளர் - 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு :
- விண்ணப்பதாரர் 18 முதல் 57 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- இளநிலை உதவியாளர் பணிக்கு 34 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.19,500 முதல் ரூ.1,31,400 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : கீழே இணைக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 12.11.2021 தேதிக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://nmskamarajpolytechnic.com/ அல்லது கீழே இணைக்கப்பட்டுள்ள அறிவிப்பு விளம்பரத்தினைக் காணவும்.


Click it and Unblock the Notifications












