வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS) 11 வங்கிகளில் காலியாக உள்ள 4045 'கிளார்க்' பணியிடங்களுக்கு, தகுதி, ஆர்வமுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் என, அறிவித்துள்ளது.
ஆன்லைன் வாயிலாக, இப்பணியிடங்களுக்கு ஜூலை 21 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, ஐ.பி.பி.எஸ்., அறிவித்துள்ளது. டோண்ட் மிஸ் இட்... !
நிர்வாகம் : வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : கிளார்க் (Clerk)
மொத்த காலிப் பணியிடங்கள் : 4045
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

கல்வித் தகுதி
'கிளார்க்' பணிக்கு, அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம்(Bachelor's Degree) தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
மேலும், விண்ணப்பதாரர்கள் கணினி உபயோகத்தில் போதியளவு அனுபவம் மற்றும் கணினி பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ் வைத்திருந்தால், கூடுதல் தகுதி மற்றும் சிறப்பாக கருதப்படும்.
எந்தெந்த வங்கிகள்
Bank of Baroda
Canara Bank
Indian Overseas Bank
UCO Bank
Bank of India
Central Bank of India
Punjab National Bank
Union Bank of India
Bank of Maharashtra
Indian Bank
Punjab & Sind Bank
வயது வரம்பு
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.07.2023 அன்றைய நாளின்படி, குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 28 வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியம். 28 வயதிற்கு மேற்பட்ட நபர்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.
வயது தளர்வுகள் குறித்த விவரங்களுக்கு, அதிகாரப்பூர்வ அறிவிப்பாணை வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.
விண்ணப்பக் கட்டணம்
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களிடம் ரூ.850/- விண்ணப்ப கட்டணம் வசூலிக்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் SC / ST / EWS பிரிவை சேர்ந்தவராக இருப்பின் ரூ.175/- விண்ணப்ப கட்டணமாக வசூலிக்கப்படும்.
விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள், அதிகாரப்பூர்வ அறிவிப்பாணை படித்து, கட்டுரையின் இறுதியில் உள்ள இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, ஜூலை 21க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், கீழ்கண்ட முறையில் தேர்வு செய்யப்பட்டு, கிளார்க் பணியில் அமர்த்தப்படுவர்.
Prelims exam
Main exam
Personal interview
ஊதியம்
Clerk பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் பணியின் போது, தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப, IBPS ஆல் மாத ஊதியம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
ibps.in க்குச் செல்லவும்.
CRP Clerks XIII க்கான விளம்பரத்தைக் கிளிக் செய்யவும்.
அந்த அறிவிப்பு படித்து, விண்ணப்பிப்பதற்கான தகுதியைச் சரிபார்க்கவும்.
ஆன்லைன் படிவத்தை கவனமாக நிரப்பவும்.
பரிந்துரைக்கப்பட்ட முறையில் கட்டணம் செலுத்தவும்.
பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை சரிபார்த்து சமர்ப்பிக்கவும்.
எதிர்கால பயன்பாட்டிற்காக விண்ணப்பப் படிவத்தின் நகலை எடுத்துக் கொள்ளுங்கள்.
மறக்காதீங்க
ஆன்லைன் வாயிலாக மட்டுமே கிளார்க் பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
நோட் இட் ப்ளீஸ்( இந்த அறிவிப்புகள் தோராயமானது)
01.07.2023 முதல் 21.07.2023 வரை
விண்ணப்பத் திருத்தம்/மாற்றம் உள்ளிட்டவை மேற்கொள்ளலாம்.
01.07.2023 முதல் 21.07.2023 வரை
விண்ணப்பக் கட்டணம்/அறிவிப்புக் கட்டணங்கள் செலுத்தலாம்.
ஆகஸ்ட் 2023
முந்தைய தேர்வுக்கான அழைப்புக் கடிதங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஆகஸ்ட் 2023
பயிற்சி தேர்வுக்கு முந்தைய பயிற்சி நடைபெறும்.
ஆகஸ்ட், 2023
ஆன்லைன் தேர்வுக்கான அழைப்புக் கடிதங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
முதல்நிலை ஆன்லைன் தேர்வு
ஆகஸ்ட்/ செப்டம்பர், 2023
முதல் நிலை ஆன்லைன் தேர்வின் முடிவு செப்டம்பர்/ அக்டோபர், 2023
செப்டம்பர்/அக்டோபர், 2023
ஆன்லைன் முதன்மை தேர்வு முடிவுகள் அறிவிப்பு
செப்டம்பர்/அக்டோபர், 2023
ஆன்லைன் முதன்மை தேர்வுக்கான அழைப்பு கடிதத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்-
அக்டோபர், 2023
ஆன்லைன் முதன்மை தேர்வு
ஏப்ரல், 2024
தற்காலிக ஒதுக்கீடு (ஆன்லைனில்)
விண்ணப்பதாரர்கள் மேலே வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது அறிவிப்பாணை வாயிலாக, மேலும் கூடுதல் விவரங்களை அறிந்து கொள்ள முடியம்.
தேர்வில் முறைகேடுகளில் ஈடுபடும் நபர்கள் கண்டறியப்பட்டால், அவர்கள் எந்தவொரு தேர்விலும் பங்கேற்க முடியாது என்பதை நினைவில் கொள்ளவும்.


Click it and Unblock the Notifications












