ஜிப்மர் மருத்துவமனையில் ஸ்டாப் நர்ஸ் பணியிடம் காலி...!!!

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் உள்ள தடுப்பு மற்றும் சமூக மருத்துவத் துறையில் நர்ஸ் (Staff Nurse) பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் இந்தப் பணியிடத்துக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம்.

கூடுதல் விவரங்களுக்கு https://jipmer.edu.in/ என்ற இணையதள முகவ ரியைக் கிளிக் செய்து காணலாம்.
ஜவஹர்லால் பட்ட மேற்படிப்பு மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்தான் (Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research), தமிழில் சுருக்கமாக ஜிப்மர்(JIPMER) என்றழைக்கப்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகம் புதுச்சேரியில் உள்ளது. இந்தியாவின் தலைசிறந்த மருத்துவக் கல்லூரிகளில் இதுவும் ஒன்றாக இது அறியப்படுகிறது. தன்னாட்சி அதிகாரம் கொண்ட இந்நிறுவனம், இந்திய மத்திய அரசின் நிதியுதவியுடன் இயங்குகிறது. இந்நிறுவனம் கல்லூரியுடன் கூடிய மருத்துவமனையையும் கொண்டுள்ளது. பல்வேறு மருத்துவப்படிப்புகளை இந்நிறுவனம் வழங்குவதால், இந்திய மாணவர்கள் மட்டுமின்றி அண்டை நாட்டைச் சேர்ந்தவர்களும் இக்கல்லூரியில் பயில்கின்றனர்.

இந்நிறுவனம் 3,000 பணியாளர்களையும் நூற்றுக்கணக்கான ஆசிரியர்களையும் கொண்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 150 இளநிலை மாணவர்களையும், 200 முதுகலை மாணவர்களையும் சேர்த்துக் கொள்கிறது. பாண்டிச்சேரி முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சோ. தட்சணாமூர்த்தி முதலியார் முயற்சியால் இம்மருத்துவமனை உருவானது.

ஜிப்மர் மருத்துவமனையில் ஸ்டாப் நர்ஸ் பணியிடம் காலி...!!!

1823-ல் உருவாக்கப்பட்ட இந்த மருத்துவமனை, பல்கலைக்கழகம் தற்போது 200 ஆண்டுகளை நிறைவு செய்து பீடுநடை போட்டு வருகிறது.

இந்த சிறப்பு வாய்ந்த ஜிப்மர் மருத்துவமனையில்தான் தற்போது நர்ஸ் (Staff Nurse) பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜிப்மரில் நர்ஸ் பணியிடத்துக்கான கல்வி தகுதி: ஜிப்மரில் நர்ஸ் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து பி.எஸ்சி நர்சிங் (B. Sc Nursing) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஏதேனும் மாநில நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்யப்பட்ட செவிலியராக இருக்க வேண்டும்

ஜிப்மரில் நர்ஸ் பணியிடத்துக்கானதேர்வு செயல்முறை:

ஜிப்மர் மருத்துவமனை பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பங்கள் பரிசீலனை, விண்ணப்பங்களை இறுதி செய்தல், சான்றிதழ் சரிபார்ப்பு, எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு (Applications Scrutiny, Shortlisting, Certificates Verification, Written Test மற்றும் Interview) ஆகிய தேர்வு செயல் முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணிக்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 1.1.2024 அன்றைக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

விளம்பரம் தொடர்பான அறிவிப்பை https://jipmer.edu.in/sites/default/files/Recruitment for ICMR NHL EBV Staff nurse Dec 2023.pdf என்ற இணையதள லிங்க்கைக் கிளிக் செய்து அறியலாம்.

கூடுதல் விவரங்களுக்கு https://jipmer.edu.in/ என்ற இணையதள முகவ ரியைக் கிளிக் செய்து காணலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Jawaharlal Institute of Postgraduate Medical Educations and Research JIPMER Pondicherry has invited the latest Staff Nurse jobs Vacancy 2023, those interested who have done BSc Nursing/GNM Nursing courses, those candidates must check JIPMER Pondicherry official notification
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+