இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் திருநெல்வேலி மாவட்டம், மகேந்திரகிரி பகுதியில் செயல்பட்டு வரும் இஸ்ரோ புரொபல்ஷன் காம்ப்ளக்ஸ்-யில் காலியாக உள்ள விஞ்ஞானி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு பி.இ மெக்கானிக்கல் இன்ஜினியரிங், எம்.இ தொழில்துறை பாதுகாப்பு பொறியியல் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இஸ்ரோ புரொபல்ஷன் காம்ப்ளக்ஸ்
மேலாண்மை : மத்திய அரசு
பணி : விஞ்ஞானி / பொறியாளர்
மொத்த காலிப் பணியிடம் : 01
கல்வித் தகுதி : எம்.இ, எம்.டெக் துறையில் 60 சதவிகிதம் மதிப்பெண்களுடன் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
(அல்லது)
பி.இ, பி.டெக் துறையில் முதல் வகுப்பில் மெக்கானிக்கல் அல்லது கெமிக்கல் இன்ஜினியரிங் படித்து குறைந்தபட்சம் 65 சதவிகித மதிப்பெண்கள் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர்கள் 18 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரையில்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.iprc.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 30.09.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : The Administrative Officer, (Recruitment), IPRC Propulsion Complex (IPRC), Mahendragiri, Tirunelveli - 627133.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவார்.
விண்ணப்பக் கட்டணம் : பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.250
மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் இல்லை.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://career.iprc.gov.in/recruit/advt.jsp என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












