ஐஆர்இஎல் (IREL India Limited) இந்தியா நிறுவனத்தில் தற்போது முதன்மை மேலாளர், சீனியர் மேலாளர், துணை மேலாளர், உதவி மேலாளர் (Chief Manager, Senior Manager, Deputy Manager, Assistant Manager ) போன்ற பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு https://jobapply.in/irel/2023/ExecutiveSupervisor/Default.aspx என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.
இந்தியன் ரேர் எர்த்ஸ் நிறுவனமானது மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் அமைந்துள்ள ஒரு பொதுத்துறை நிறுவனமாகும்.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. முன்பு இந்தியன் ரேர் எர்த்ஸ் நிறுவனம் என்று அழைக்கப்பட்டு வந்த இந்நிறுவனம் தற்போது ஐஆர்இஎல் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது. பூமியில் உள்ள அரிதான உலோகங்களை சுரங்கம் அமைத்து வெளியே கொண்டு வரும் நிறுவனமாகும். பின்பு இந்த உலோகங்களை சுத்திகரித்து பயன்பாட்டுக்குக் கொண்டு வருகிறது.

அரிய உலோகங்களை தோண்டி எடுக்கும் சுரங்கம்,சுத்திகரிப்பு ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றது இந்த நிறுவனம்.
இது சுமார் 10,000 மெட்ரிக் டன் அரிய கனிமங்களை செயலாக்கும் திறனை நிறுவப் பெற்றுள்ளது. மோசனசைட், லான்தானும், செரியம், நியோடைமியம், பிரசியோடைமியம், சமாரியம், கடோலினியம், இட்ரியம் போன்ற அரிய வகை தனிமங்களை சுரங்கம் அமைத்து வெட்டியெடுக்கிறது இந்நிறுவனம்.
1952-ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் முதலில் மோனசைட் கனிமத்தை வெட்டியெடுத்தது.
ற்போது நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சுரங்கம் அமைத்து பல்வேறு அரியவகை கனிமங்களை வெட்டியெடுத்து வருகிறது. கேரளாவில் பெரியார் ஆற்றின் கரையில் உள்ள ஆலுவா, ஒடிசா மாநிலம் சத்ரபூர் உள்ளிட்ட இடங்களில் இதன் பிரிவுகள் அமைந்துள்ளன. தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டம் மணவாளகுறிச்சியில் மற்றொரு பிரிவு அமைந்துள்ளது. வெட்டியெடுக்கப்படும் அரிய வகை கனிமங்களில் இருந்து இல்மனைட், ருட்டைல், ஜிர்கான், மோனசைட், சில்லிமனைட், கார்நெட் ஆகிய பொருட்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன.
இந்த பெருமைமிகு ஐஆர்இஎல் நிறுவனத்தில்தான் தற்போது முதன்மை மேலாளர், சீனியர் மேலாளர், துணை மேலாளர், உதவி மேலாளர் (Chief Manager, Senior Manager, Deputy Manager, Assistant Manager ) போன்ற பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
கல்வித்தகுதி:
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் பின்வரும் கல்வித் தகுதியைப் பெற்றவராக இருக்க வேண்டும்.
முதன்மை மேலாளர்- Chief Manager / Senior Manager (Finance) - CA / CMA, B.Com + MBA
துணை, உதவி மேலாளர்(நிதி) -Deputy Manager / Assistant Manager (Finance) - CA / CMA, B.Com + MBA
துணை, உதவி மேலாளர் (டெக்னிக்கல்)Deputy Manager / Assistant Manager (Technical) - BE / B.Tech
டெக்னிக்கல் சூப்பர்வைசர்-Technical Supervisor / Junior Technical Supervisor - Diploma
வயதுத்தகுதி:
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பின்வரும் வயது வரம்பிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
Chief Manager / Senior Manager (Finance) - அதிகபட்சம் 42 / 38 வயது
Deputy Manager / Assistant Manager (Finance) - அதிகபட்சம் 32 / 28 வயது
Deputy Manager / Assistant Manager (Technical) - அதிகபட்சம் 32 / 28 வயது
Technical Supervisor / Junior Technical Supervisor - அதிகபட்சம் 33 / 30 வயது
ஆண்டு ஊதியம்:
இந்த ஐஆர்இஎல் (IREL) நிறுவன பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்கள் ரூ.7.4 லட்சம் முதல் ரூ.23.9 லட்சம் வரை ஆண்டு ஊதியமாக பெறுவார்கள்.
தேர்வு செய்யும் முறை:
நேர்முகத்தேர்வு, சைக்கோமெட்ரிக் டெஸ்ட், குரூப் எக்சர்சைஸ், எழுத்துத்தேர்வு( Interview, Psychometric Test, Group Exercise, Written Test) ஆகியவற்றின் அடிப்படையில் இந்தப் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்ப கட்டணம்:
இந்தப் பணிக்கு எஸ்சி, எஸ்டி, பிடபிள்யூடி, இஎஸ்எம், மகளிர் (SC / ST / PWBD / ESM / Women) ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. மற்ற நபர்கள் - ரூ.500/ விண்ணப்ப கட்டணமாக செலுத்தவேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் இப்பதிவின் இறுதியில் இப்பணிகளுக்கென கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். 03.01.2024 அன்றுக்குள் பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
கூடுதல் விவரங்களுக்கு https://jobapply.in/irel/2023/ExecutiveSupervisor/Default.aspx என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.
விண்ணப்பம் தொடர்பான தகவல்களைப் பெற https://jobapply.in/irel/2023/ExecutiveSupervisor/Adv-Eng.pdf என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்யுங்கள்.


Click it and Unblock the Notifications












