இந்திய ரயில்வேத் துறையின் (IRCTC) உணவு பிரிவு மற்றும் சுற்றுலா கழகத்தில் காலியாக உள்ள இணை பொது மேலாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.2 லட்சம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : Joint General Manager
மொத்த காலிப் பணியிடங்கள் : 01
கல்வித் தகுதி :
- அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும், Accounts field பணியில் முன் அனுபவமும், MS office, Excel, Word, Access போன்ற பணிகளில் நல்ல திறன் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 55 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.15,600 முதல் அதிகபட்சம் ரூ.2,00,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 20.09.2021தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.irctc.com/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.


Click it and Unblock the Notifications












