இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் (IPPB) காலியாக உள்ள மேலாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 23 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.2.92 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி (IPPB)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : Chief Manager, Senior Manager, Manager, DGM உள்ளிட்ட பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
மொத்த காலிப் பணியிடங்கள் : 23
வயது வரம்பு :
- விண்ணப்பதாரர் 01.09.2021 தேதியின்படி 23 முதல் 58 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
கல்வித் தகுதி :
அரசு அனுமதி பெற்ற பெற்ற கல்வி நிறுவனத்தில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் இளநிலை பொறியியல், இளநிலை தொழில்நுட்பம், எம்பிஏ, ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றவர்கள், Chartered Accountant (CA) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும், பணியில் 3 முதல் 12 ஆண்டுகள் வரையில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.94,000 குறைந்தபட்சம் அதிகபட்சம் ரூ.2,92,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://www.ippbonline.com/ எனும் இணையதளத்தின் மூலம் 09.10.2021 அன்று முதல் வரும் 22.10.2021 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
- பொது விண்ணப்பதாரர்கள் - ரூ.750
- எஸ்.சி, எஸ்.டி, பிற்படுத்தப்பட்ட விண்ணப்பதாரர்கள் - ரூ.150
தேர்வு முறை : விண்ணப்பதாரர் குழு விவாதம், ஆன்லைன் வழியிலான தேர்வு உள்ளிட்டவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.ippbonline.com அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












