இந்தியன் ஆயில் நிறுவனத்தில் டாக்டர்களுக்கு அருமையான வேலைவாய்ப்பு..!!!

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்(IOCL) நிறுவனத்தில் காலியாக உள்ள டாக்டர் (Retainer Doctor) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் இந்தப் பணியிடங்களுக்கு உடனடியாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு https://iocl.com/admin/img/UploadedFiles/LatestJobOpening/Files/c38fce97d4ce4386b38b73547844d9c4.pdf என்ற இணையதள லிங்க்கைத் தொடர்புகொண்டு அறியலாம்.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஓசிஎல்) நாட்டில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் ஒன்றாகும். இந்தியன் ஆயில் என்று அறியப்படும் இந்நிறுவனம் மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் மற்றும் எரிவாயு துறை நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் டாக்டர்களுக்கு அருமையான வேலைவாய்ப்பு..!!!

எண்ணெய் மற்றும் எரிவாயு அமைச்சகத்திற்கு சொந்தமாக, புது டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. இது நாட்டின் மிகப்பெரிய வணிக எண்ணெய் நிறுவனமாகும், இது 2020-21 நிதியாண்டில், 7 21,762 கோடி (2.9961 பில்லியன் அமெரிக்க டாலர்) நிகர லாபத்தைக் கொண்டுள்ளது.

2020 பார்ச்சூன் 500 பட்டியலில் இந்தியாவில் 2ம் இடத்திலும், உலகளவில் 151ம் இடத்திலும் உள்ளது. 31 மார்ச் 2020 நிலவரப்படி, இந்தியன் ஆயிலின் ஊழியர்களின் எண்ணிக்கை 33,498 ஆகும். இதில் 17,704 நிர்வாகிகள் மற்றும் 15,794 நிர்வாகிகள் அல்லாதவர்கள்.

இது இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமாகும், 2019-20 நிதி ஆண்டில் 5,66,950 கோடி வருமானத்தையும் 1,313 கோடி ருபாய் நிகர லாபத்தையும் கொண்டுள்ளது.

இந்தியன் ஆயில் நிறுவனம், ஹைட்ரோ கார்பன் உற்பத்தி, பகிர்வு, விற்பனை ஆகியவற்றை கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு தேடல் மற்றும் உற்பத்தியுடன் இணைக்கிறது.

இந்த பெருமைமிகு நிறுவனத்தில்தான் தற்போது டாக்டர் (Retainer Doctor) பணியிடங்கள் அதிக அளவில் காலியாக உள்ளன.

இந்த ரீடெய்னர் டாக்டர் (Retainer Doctor) பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற மருத்துவ கல்லூரி / பல்கலைக்கழகங்களில் MBBS, MD, MS டிகிரி முடித்தவராக இருக்க வேண்டும்.

மேலும் இந்த, Retainer Doctor பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் General Practitioner ஆக குறைந்தது 2 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவத்தை பெற்று உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்புத் தகுதியாக கருதப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த IOCL நிறுவன பணிக்கு தேர்வாகும் டாக்டர்கள், தங்கள் பணியின் போது ரூ.1020/- முதல் ரூ.1320/- வரை ஒரு நாளுக்கான சம்பளமாக பெறுவார்கள்.

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த Retainer Doctor பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அறிவிப்பு வெளியான 15 நாட்களுக்குள் தபால் செய்ய வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு https://iocl.com/admin/img/UploadedFiles/LatestJobOpening/Files/c38fce97d4ce4386b38b73547844d9c4.pdf என்ற இணையதள லிங்க்கைத் தொடர்புகொண்டு அறியலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Indian Oil Corporation Limited (IOCL) is inviting interested and eligible applicants to fill up the post of Doctors at IIPM on a contractual basis. As given in the official notification of Indian Oil Corporation Limited Recruitment 2023, the selected applicant will be placed in Delhi NCR Gurgaon.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+