தனியார் விமான சேவையில் முன்னணியில் உள்ள நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோவில் ஆபீஸர்-கார்கோ ஆப்பரேஷன்ஸ், எக்சிகியூட்டிவ் -கஸ்டமர் எக்ஸ்பிரீயன்ஸ் (Officer - Cargo Operations, Executive - Customer Experience) ஆகிய பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் இந்தப் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு https://careers.goindigo.in/ என்ற இணையதள முகவரியைக் காணலாம்.
இந்தியாவிலுள்ள ஏர்லைன் நிறுவனங்களில் இது மிகப்பெரியதாக அமைந்துள்ளது. 2014 ஆம் ஆண்டு மே மாதத்தின் படி, இதன் சந்தைப் பங்கீடு 31.7 சதவீதம் ஆகும். விரைவாக வளர்ந்துவரும் உலகிலுள்ள மிகக்குறைந்த விமானசேவை நிறுவனங்களில் இதுவும் ஒன்று. 79 புதிய ஏர்பஸ் 320 ரக விமானக் குழுக்களின் உதவியுடன் இந்நிறுவனம் நாள்தோறும் 516 தினசரி விமானங்களை இயக்குகிறது. இதன் மூலம் 36 இலக்குகளை, நகரங்களை அடைய இயலும். இன்டிகோ ராகுல் பாட்டியா மற்றும் ராகேஷ் கங்க்வால் என்பவர்களால் 2006 ஆம் ஆண்டு தொடக்கத்தில் அமைக்கப்பட்டது.

இன்டர்க்லோப் என்டர்பிரைசஸ் இன்டிகோவின் 52 சதவிகிதம் பங்குகளையும் கேளும் முதலீடுகள் 48 சதவிகிதம் பங்குகளையும் வைத்துள்ள மிகப்பெரிய நிறுவனமாக இது வளர்ந்துள்ளது. இன்டிகோவின் உள்ளூர் சேவைகள் மும்பை, புது டெல்லி, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு போன்ற 38 இந்திய நகரங்கள் மற்றும் துபாய், சிங்கப்பூர், மஸ்கட், பாங்காக் மற்றும் காத்மாண்டு என 5 வெளிநாட்டு நகரங்களுக்கு தினமும் 633 க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்குகிறது.
தற்போது இந்த நிறுவனம் ஏர்பஸ் ஏ 320 ரகத்தை சேர்ந்த 96 விமானங்களை இயக்குகி வருகிறது. 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல், சர்வதேச விமானங்களை இயக்கும் வாய்ப்பினை இந்நிறுவனம் பெற்றது. தொடர்ந்த ஐந்தாண்டு காலச் சேவையினால் இவ்வாறு தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
இதன் முதல் சர்வதேச விமானமாக நியூ டெல்லியிருந்து துபாய்க்கு 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி விமானம் அனுப்பப்பட்டது. அதனையடுத்த சில வாரங்களில் இந்தச் சேவை நியூடெல்லியில் இருந்தும் மும்பையில் இருந்தும், பாங்காக், சிங்கப்பூர், மஸ்கட், காத்மாண்ட் எனப் பல இடங்களுக்கு விரிவடைந்தது.
இந்த பெருமைமிகு இன்டிகோ (Indigo) நிறுவனத்தில்தான் தற்போது ஆபீஸர்-கார்கோ ஆப்பரேஷன்ஸ், எக்சிகியூட்டிவ் -கஸ்டமர் எக்ஸ்பிரீயன்ஸ் (Officer - Cargo Operations, Executive - Customer Experience) ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளன.
அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Graduate Degree) தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப்பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்கள் டெல்லி, குர்காவ்ன் (Delhi, Gurgaon) ஆகிய இடங்களில் உள்ள இண்டிகோ (Indigo) நிறுவனத்தில் பணியமர்த்தப்பட உள்ளனர்.
இந்த நிறுவன பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத சம்பளம் பெறுவார்கள்.
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு(Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.
https://jobs.goindigo.in/job/Delhi-Officer-Cargo-Operations-DL/20172544/
https://jobs.goindigo.in/job/Gurgaon-Executive-Customer-Experience-HR/18879644/


Click it and Unblock the Notifications












