தனியார் விமான சேவை நிறுவனத்தில் பணிபுரிய உங்களுக்கு விருப்பமிருக்கா...!!!

தனியார் விமான சேவை நிறுவனமான இண்டிகோ ஏர்லைன்ஸ் (Indigo Airlines) நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்கள் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது ஜூனியர் டெக்னீஷியன்( Junior Technician) பணிகள் உட்பட பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இன்டிகோ ஏர்லைன்ஸ் (IndiGo), இந்தியாவின் ஹரியாணா மாநிலத்தில் உள்ள குர்கானைத் தலைமையிடமாகக் கொண்ட விமான நிறுவனம் ஆகும். இது பயணிகளுக்கான விமானங்களை நாடு முழுவதும் இயக்குகிறது. இந்தியாவின் குறைந்த கட்டண விமானச் சேவைகளில் இதுவும் ஒன்று.

தனியார் விமான சேவை நிறுவனத்தில் பணிபுரிய உங்களுக்கு விருப்பமிருக்கா...!!!

இந்தியாவிலுள்ள ஏர்லைன் நிறுவனங்களில் இது மிகப்பெரியதாக அமைந்துள்ளது. 2014 ஆம் ஆண்டு மே மாதத்தின் படி, இதன் சந்தைப் பங்கீடு 31.7 சதவீதம் ஆகும். விரைவாக வளர்ந்துவரும் உலகிலுள்ள மிகக்குறைந்த விமானசேவை நிறுவனங்களில் இதுவும் ஒன்று. 79 புதிய ஏர்பஸ் 320 ரக விமானக் குழுக்களின் உதவியுடன் இந்நிறுவனம் நாள்தோறும் 516 தினசரி விமானங்களை இயக்குகிறது. இதன் மூலம் 36 இலக்குகளை, நகரங்களை அடைய இயலும்.

இன்டிகோ ராகுல் பாட்டியா மற்றும் ராகேஷ் கங்க்வால் என்பவர்களால் 2006 ஆம் ஆண்டு தொடக்கத்தில் அமைக்கப்பட்டது. இன்டர்க்லோப் என்டர்பிரைசஸ் இன்டிகோவின் 52 சதவிகிதம் பங்குகளையும் கேளும் முதலீடுகள் 48 சதவிகிதம் பங்குகளையும் வைத்துள்ள மிகப்பெரிய நிறுவனமாக இது வளர்ந்துள்ளது.

இன்டிகோவின் உள்ளூர் சேவைகள் மும்பை, புது டெல்லி, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு போன்ற 38 இந்திய நகரங்கள் மற்றும் துபாய், சிங்கப்பூர், மஸ்கட், பாங்காக் மற்றும் காத்மாண்டு என 5 வெளிநாட்டு நகரங்களுக்கு தினமும் 633 க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்குகிறது. தற்போது இந்த நிறுவனம் ஏர்பஸ் ஏ 320 ரகத்தை சேர்ந்த 96 விமானங்களை இயக்குகி வருகிறது.

2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல், சர்வதேச விமானங்களை இயக்கும் வாய்ப்பினை இந்நிறுவனம் பெற்றது. தொடர்ந்த ஐந்தாண்டு காலச் சேவையினால் இவ்வாறு தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் முதல் சர்வதேச விமானமாக நியூ டெல்லியிருந்து துபாய்க்கு 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி விமானம் அனுப்பப்பட்டது. அதனையடுத்த சில வாரங்களில் இந்தச் சேவை நியூடெல்லியில் இருந்தும் மும்பையில் இருந்தும், பாங்காக், சிங்கப்பூர், மஸ்கட், காத்மாண்ட் எனப் பல இடங்களுக்கு விரிவடைந்தது.
இந்த பெருமைமிகு இண்டிகோ ஏர்லைன்ஸ் (Indigo) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி ஜூனியர் டெக்னீஷியன் (Junior Technician) உட்பட பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. அவை விரைவில் நிரப்பப்பட உள்ளன.

இந்த ஜூனியர் டெக்னீஷியன் (Junior Technician) பணியிடத்துக்கான கல்வித்தகுதியாக அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த Indigo Airlines பணியிடங்களுக்கு வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு Indigo Airlines-ன் நிபந்தனைகளின்படி ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

கூடுதல் விவரங்களுக்கு https://jobs.goindigo.in/job/India-Junior-Technician-Indi/20050644/ என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Indigo Airlines announced upcoming opportunities for dynamic and enthusiastic individuals to join their esteemed ground staff team. Indigo Airlines is going to recruit Junior Technician posts. please log on into https://jobs.goindigo.in/job/India-Junior-Technician-Indi/20050644/ for more details.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+