இந்திய கடற்படையில் காலியாக உள்ள ஃபயர்மேன் (Fire Men) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு https://www.indiannavy.nic.in/content/civilian என்ற இணையதள முகவரியை தொடர்புகொண்டு அறியலாம்.
இந்த பெருமைவாய்ந்த இந்திய கடற்படையில் தற்போது 40 ஃபயர்மேன் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இந்திய கடற்படை பணியிடங்களுக்கான கல்வி தகுதி: விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், ஆங்கிலத்தில் சரளமாக பேச தெரிந்திருக்க வேண்டும்.

இந்திய கடற்படை பணியிடங்களுக்கான வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் வயதானது விண்ணப்பிக்கும் இறுதி தேதியின் படி, அதிகபட்சம் 56 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
இந்திய கடற்படை பணியிடங்களுக்கான சம்பள விவரம்: தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக ரூ.19,900/- முதல் ரூ.63200/- வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை: புரோபீசியன்ஸி டெஸ்ட், டாக்குமெண்ட் வெரிபிகேஷன் (Proficiency Test, Document Verification) முறையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.
இந்திய கடற்படை பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ இணைய முகவரியில் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 60 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இணையதள முகவரி: கூடுதல் விவரங்களுக்கு https://www.indiannavy.nic.in/content/civilian என்ற இணையதள முகவரியை தொடர்புகொண்டு அறியலாம்.


Click it and Unblock the Notifications












