இந்திய கடற்படையில் காலியாக உள்ள டிரேட்ஸ்மேன் ஆபீஸர் (Tradesman Officer) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 910 பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் டிசம்பர் 18 முதல் 31 வரை விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு https://www.joinindiannavy.gov.in/en/page/civilian.html என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.
இந்தியக் கடற்படை என்பது இந்திய பாதுகாப்பு படைகளின் கப்பல் பிரிவாக அமைந்துள்ளது. 2013-2014 காலகட்டத்தில் இதில் ஏறத்தாழ ஒரு லட்சத்திற்கு அதிகமான ஊழியர்கள் உள்ளனர், இவர்களில் பாதுகாப்பு படையை சேராதவர்கள் 43,000, அதிகாரிகள் 8,700, கடற்படையினர் 50,000 பேர் ஆவர்.

2008, நவம்பரில் மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலை அடுத்து "சாகர் ப்ரஹரி பல்" என்ற அமைப்பை உருவாக்கி அதில் 1,000 வீரர்களும், 80 விரைவு தாக்குதல் கப்பல்களும் இருக்கும் என இந்திய அரசு நாடாளுமன்றத்தில் ஜூலை 2009 தெரிவித்தது.
இந்தியக் கடற்படை 2014, மார்ச் மாத காலத்தில் 184 கப்பல்களை கொண்டிருந்தது. இதில் ஐ.என்.எஸ் விராட், ஐஎன்எஸ் விக்ரமாதித்யா ஆகியனவும் 17 நீர்மூழ்கிக்கப்பல்களும் அடங்கும்.
நாட்டின் கடல் எல்லைகளை காப்பதுதான் கடற்படையின் முதன்மையான நோக்கமாக இருப்பினும், இந்தியா தனது கடற்படையைப் பல விதங்களில் பயன்படுத்துகிறது. ஒருங்கிணைந்த செயற்பாடுகள் மூலமாக சர்வதேச உறவுகளை மேம்படுத்துதல், துறை முகங்களைப் பார்வையிடுதல், பேரிடர் நிவாரணம் உள்ளிட்ட பல மனிதாபிமானச் செயல்பாடுகள் ஆகியவற்றையும் இவை உள்ளடக்கியுள்ளன.
நீல நிறக் கடற்படை என அடையாளப்படுத்திக் கொள்வதற்காக தனது சக்திகளை பெருக்கிக் கொள்ளும் நோக்கத்தோடு இந்தியக் கடற்படை மிகப் பெரிய அளவில் நவீனத்துவத்திற்கும் விரிவாக்கத்திற்கும் தன்னை உட்படுத்திக் வருகிறது.
இந்த பெருமைமிகு இந்திய கடற்படையில்தான் தற்போது ஏராளமான பணியிடங்கள் காலியாகவுள்ளன.
சார்ஜ்மேன் (Chargeman (Ammunition Workshop) பிரிவில் 22 பணியிடங்களும், சார்ஜ்மேன்-பேக்டரி பிரிவில் Chargeman (Factory) 20 பணியிடங்களும், சீனியர் டிராப்ட்ஸ்மேன் எலக்ட்ரிக்கல் பிரிவில்( Senior Draughtsman (Electrical) 142 பணியிடங்களும்,
சீனியர் டிராப்ட்ஸ்மேன் மெக்கானிக்கல் பிரிவில் (Senior Draughtsman (Mechanical) 26 பணியிடங்களும்,
சீனியர் டிராப்ட்ஸ்மேன் கன்ஸ்டிரக்சன் பிரிவில் (Senior Draughtsman (Construction) 29 பணியிடங்களும், சீனியர் டிராப்ட்ஸ்மேன் கேட்டோகிராபிக் பிரிவில்( Senior Draughtsman (Cartographic) 11 பணியிடங்களும், சீனியர் டிராப்ட்ஸ்மேன் அர்மமென்ட் பிரிவில் (Senior Draughtsman (Armament) 50 பணியிடங்களும்,
டிரேட்ஸ்மேன்-ஈஸ்டர்ன் நேவல் கமாண்ட் (Tradesman) Eastern Naval Command) பிரிவில் 9 பணியிடங்களும்,
டிரேட்ஸ்மேன்- வெஸ்டர்ன் நேவல் கமாண்ட் (Tradesman) Western Naval Command) பிரிவில் 565 பணியிடங்களும்,
டிரேட்ஸ்மேன்-சதர்ன் நேவல் கமாண்ட்(Tradesman)-Southern Naval Command) பிரிவில் 36 பணியிடங்களும் என மொத்தம் 910 பணியிடங்கள் காலியாக உள்ளன.
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Diploma in Chemical Engineering, B.Sc in Physics/ Chemistry/ Mathematics/ Electrical/ Electronics/ Mechanical/ Computer Engineering/ 10th, ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 க்குள் இருக்க வேண்டும்.மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
Chargemen, Senior Draughtsman - ரூ.35,400 - 1,12,400/-
Tradesman - ரூ.18,000 - 56,900/ வழங்கப்படும்.
விண்ணப்ப கட்டணமாக SC/ST/PWBD/Ex-Servicemen/Women பிரிவினருக்கு கட்டணம் கிடையாது
மற்ற விண்ணப்பதாரர்கள் ரூ.250/- செலுத்தவேண்டும்.
விண்ணப்பதாரர்கள் www.joinindiannavy.gov.in என்ற ஆட்சேர்ப்பு இணையதளத்தில் தங்கள் விண்ணப்பத்தைப் பதிவுசெய்து 31.12.2023 க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு https://www.joinindiannavy.gov.in/en/page/civilian.html என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications












