இந்தியன் வங்கியில் (Indian Bank) இருந்து சீஃப் எக்சிகியூட்டிவ் ஆபீஸர், ஹெட் ஆஃப் ஹியூமன் ரிசோர்ஸ், ஹெட் ஆஃப் டெக்னாலஜி (Chief Executive Officer, Head of Human Resource, Head of Technology)போன்ற பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும்,வ விருப்பமும் உள்ள நபர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விணணப்பிக்கலாம்.
இந்தியன் வங்கியில் Chief Executive Officer - 1 பணியிடம், Head of Human Resource - 1 பணியிடம், Head of Technology - 1 பணியிடம் காலியாக உள்ளன.
இப்பணிகளுக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் பட்டப்படிப்பு, எம்பிஏ, சிஏ, ஐசிடபிள்யூ, எம்சிஏ, பி.இ., பி.டெக், எம்.இ., எம்.டெக் (Bachelor's Degree, MBA, Post Graduate Diploma, CA, ICWA, MCA, BE, B.Tech, ME, M.Tech) ஆகிய பட்டங்களில் ஏதேனும் ஒன்றை பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 36 வயது முதல் 57 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் இந்தியன் வங்கி விதிமுறைப்படி மாத ஊதியத்தைப் பெறுவார்கள். இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் 03 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்பட உள்ளனர்.
இந்தபணிகளுக்கு தகுதியான நபர்கள் முதன்மை நேர்முகத் தேர்வு, எழுத்துத் தேர்வு, குழு விவாதம் (Preliminary Interview, Written Test, Group Discussion) ஆகிய தேர்வு முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்ப கட்டணம்
SC / ST / PWBD பிரிவினருக்கு - ரூ.100./, மற்ற நபர்கள் - ரூ.1000/ என்ற வகையில் செலுத்த வேண்டும்.
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு டிசம்பர் 18-ம் தேதிக்குள் (18.12.2023) தபாலில் அனுப்பித் தர வேண்டும்.
இதுதொடர்பான கூடுதல் விவரங்களை அறிய
https://www.indianbank.in/wp-content/uploads/2023/12/Detailed-Advertisement_revised.pdf என்ற இணையதள லிங்க்கை தொடர்புகொள்ளலாம்.
விண்ணப்பங்களை டவுன்லோடு செய்வதற்கு
https://www.indianbank.in/wp-content/uploads/2023/12/Application-format-1.pdf என்ற இணையதள லிங்க்கை பயன்படுத்தலாம்.


Click it and Unblock the Notifications












