இந்திய ராணுவத்தில் இன்ஜினியர் பிரிவுகளில் பணியாற்ற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு தங்களது விண்ணப்பங்களை அனுப்பித் தரலாம். மேலும் விவரங்களுக்கு joinindianarmy.nic.in என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து காணலாம்.
இந்த சிறப்புவாய்ந்த இந்திய ராணுவத்தின் இன்ஜினியர் பிரிவுகளில்தான் தற்போது பணியாற்ற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்திய ராணுவத்தின் இன்ஜினியர் சிவில் பிரிவில் 75, கம்ப்யூட்டர் சயின்ஸ் 60, எலக்ட்ரிக்கல் 33, எலக்ட்ரானிக்ஸ் 64, மெக்கானிக்கல் 101, மற்ற பிரிவுகள் 17 இடங்கள் என மொத்தம் 381 இடங்கள் உள்ளன. இதில் பெண்களுக்கு 29 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்திய ராணுவத்தின் இன்ஜினியர் பிரிவு பணியிடங்களுக்கான கல்வித்தகுதி: தொடர்புடைய பிரிவில் பி.இ., / பி.டெக்., சில பிரிவுக்கு டிகிரி முடித்திருக்க வேண்டும்.
இந்திய ராணுவத்தின் இன்ஜினியர் பிரிவு பணியிடங்களுக்கான வயது விவரம்: 1.10.2024 அடிப்படையில் 21 - 27 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
இந்திய ராணுவத்தின் இன்ஜினியர் பிரிவு பணியிடங்களுக்கான தேர்ச்சி முறை: இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத்தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்
பணியிடம்: இந்திய ராணுவத்தின் இன்ஜினியர் பிரிவின் சென்னையிலும் பணியாற்ற வாய்ப்புக் கிடைக்கும்.
விண்ணப்பிக்கும் முறை:
இந்திய ராணுவத்தின் இன்ஜினியர் பிரிவு பணியிடங்களுக்கு ஆன்லைன்.முறையில் மட்டுமே விண்ணப்பிக்கவேண்டும்.
கடைசிநாள்:
இந்திய ராணுவத்தின் இன்ஜினியர் பிரிவு பணியிடங்களுக்கு வரும் 21.2.2024-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.
இணையதள முகவரி :
மேலும் விவரங்களுக்கு joinindianarmy.nic.in என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து காணலாம்.


Click it and Unblock the Notifications












