இந்திய விமானப் படையில் காலியாக உள்ள சமையலர், தட்டச்சர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 85 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு 10, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ரூ.25 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இந்திய விமானப் படை (IAF)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : Group C Civilian பணிகளான Cook, House Keeping Staff, MTS, LDC, Hindi Typist உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு என மொத்தமாக 85 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி : 10, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்று அரசு அனுமதி பெற்ற நிறுவனத்தில் ஐடிஐ அல்லது ஏதேனும் ஓர் துறையில் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும், பணியில் கூடுதல் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
- விண்ணப்பதாரர் 18 முதல் 25 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
ஊதியம் : ரூ.18,000 முதல் ரூ.25,500 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 22.08.2021 தேதிக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 22.08.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர் எழுத்துத் தேர்வு, செய்முறைத் தேர்வு, உடற் தகுதித் திறன் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://afcat.cdac.in/AFCAT/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












