விமானத்துறையில் பணியாற்ற உங்களுக்கு விருப்பம் உண்டா...!!!

நமது நாட்டில் உள்ள மிக முக்கிய துறைகளில் ஒன்றான இந்திய விமானத்துறையில் பணிபுரிய விரும்புபவர்களுக்கு அருமையான வாய்ப்பு தற்போது கிடைத்துள்ளது. தற்போது விமானப்படைக்கான பொது நுழைவுத் தேர்வுக்கான (AFCAT) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு AFCAT க்கான இரண்டாம் கட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. தகுதி உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு https://careerindianairforce.cdac.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

அப்காட் (AFCAT Entry) நுழைவுத் தேர்வு மூலம் வெற்றி பெறுபவர்கள் விமானத்துறையின் பணியிடங்களில் அமர முடியும்.

விமானத்துறையில் பணியாற்ற உங்களுக்கு விருப்பம் உண்டா...!!!

விமானப்படையின் பொது நுழைவுத் தேர்வின் சுருக்கம்தான் அப்காட் (AFCAT Entry) ஆகும். தற்போது விமானத்துறையில் உள்ள காலியிடங்களின் எண்ணிக்கை 317-ஆக உள்ளது.

பிளையிங் பிரிவில் (Flying) - 38 (ஆண்கள் - 28, பெண்கள் - 10), கிரவுண்ட் டூட்டி டெக்னிக்கல் பிரிவில் (Ground Duty (Technical) - 165 (ஆண்கள் - 149, பெண்கள் - 16) இடங்கள்,
கிரவுண்ட் டூட்டி-நான் டெக்னிக்கல் பிரிவில்
(Ground Duty (Non-Technical) - 114 (ஆண்கள் - 98, பெண்கள் - 16) இடங்கள் உள்ளன.
வயதுத் தகுதியாக பிளையிங் (Flying) பணியிடங்களுக்கு 20 வயது முதல் 24 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பிற பணியிடங்களுக்கு 20 முதல் 26 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதியாக பிளையிங் (Flying) பணியிடங்களுக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். 12 ஆம் வகுப்பில் இயற்பியல் மற்றும் கணித பாடங்கள் படித்திருக்க வேண்டும்.

கிரவுண்ட் டூட்டி டெக்னிக்கல் (Ground Duty (Technical) பணியிடங்களுக்கு ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங் அல்லது சம்பந்தப்பட்ட பிரிவுகளில் இன்ஜினியரிங் படித்திருக்க வேண்டும்.

இந்த பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு மற்றும் திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இந்த பணியிடங்களுக்கு https://careerindianairforce.cdac.in or https://afcat.cdac.in என்ற இணையதளப் பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி வரும் 30-ம் தேதி (30.12.2023) ஆகும்.

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://afcat.cdac.in/AFCAT/assets/images/news/AFCAT_01_2024/English_Notification_AFCAT_01-2024.pdf என்ற இணையதளப் பக்கத்தினை தொடர்புகொள்ளலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
AFCAT 1 2024 Notification was released for 317 vacancies. The Online Registration is now active for AFCAT 1 2024 and Apply for AFCAT 1 Notification 2024 through given link till 30 December 2023. The online registration for AFCAT 1 2024 has been started from 1st December 2023. Interested candidates meeting the eligibility criteria are requested to submit their applications online through the official AFCAT website and the application window for AFCAT 1 Notification 2024 will remain open until 30th December 2023.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+