இந்திய அஞ்சல் துறையில் மோட்டார் வெஹிக்கிள் மெக்கானிக் (Motor Vehicle Mechanic) பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம். கூடுதல் விவரங்களுக்கு https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/IP_21122023_BiharMMS_English.pdf என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.
இந்திய அஞ்சல் துறை 'இந்தியா போஸ்ட்' (India Post) என்ற பெயரில் மிகச் சிறப்பான முறையில் செயல்படுகிறது. இது இந்திய அரசினால் செயல்படுத்தப்படும் அஞ்சல் சேவை ஆகும். இது பல வழிகளில் மக்களுக்குச் சேவை செய்து வருகிறது. நாள் ஒன்றுக்கு 2 இலட்சம் கடிதங்கள் பட்டுவாடா செய்யப்படுகின்றன. நாட்டின் எந்த இடத்திலிருந்தும் எந்த இடத்திற்கும் அதிகபட்சமாக நான்கு நாட்களுக்குள் கடிதங்கள் பட்டுவாடா செய்யப்படுகிறது.
இந்திய அஞ்சல்துறை மொத்தம் 1,54,000 அஞ்சல் அலுவலகங்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய அஞ்சல் துறையாகும் (சீனா இரண்டாவது இடம், 57,000 தபால் அலுவகங்கள்). இதன் பரந்து விரிந்த அலுவலகங்களால் இந்தியாவின் அனைத்து இடங்களும் இணைக்கப்படுகின்றன. இந்திய அஞ்சல் துறையில் மொத்தம் 593,878 (2001-ம் வருடத்தின் படி) ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். இந்திய அஞ்சல் துறை சிறிய வகை வங்கி சேவைகளிலும் ஈடுபடுகிறது.

தன் மூலம் வங்கி வசதி இல்லாத கிராமங்களும் பயன்பெறுகின்றன. 21 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு, சுமார் 6000 நபர்களுக்கு ஒரு அஞ்சல் அலுவலகம் என்ற விகிதத்தில் இது உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 10,264 அஞ்சலகங்கள் உள்ளன.
இந்த பெருமைமிகு இந்திய அஞ்சல் துறையில்தான் தற்போது மோட்டார் வெஹிக்கிள் மெக்கானிக் (
Motor Vehicle Mechanic) பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் மெக்கானிக் பணிக்கான கல்வித்தகுதி விவரம்
மோட்டார் மெக்கானிக் பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் 8ம் வகுப்பு + மோட்டார் வெஹிக்கிள் மெக்கானிக் டிரேட் (Motor Vehicle Mechanic Trade) பயிற்சி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
மோட்டார் மெக்கானிக் பணிக்கு வயதுத்தகுதி விவரம்:
இந்த மோட்டார் மெக்கானிக் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 1.7.2023 அன்றைய தினத்தின் படி, 18 வயது முதல் 30 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
மோட்டார் மெக்கானிக் பணிக்கு ஊதிய விவரம்:
மோட்டார் மெக்கானிக் பணிக்கு பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் Level - 2 படி, ரூ.19,900/- மாத ஊதியமாக பெறுவர்.
தேர்வு செய்யும் முறை:
இந்த இந்திய அஞ்சல் துறை சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் காம்படெடிவ் டிரேட் டெஸ்ட் (Competitive Trade Test) மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் வழிமுறை:
மோட்டார் மெக்கானிக் பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் தரப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (30.1.2024) தபால் செய்ய வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/IP_21122023_BiharMMS_English.pdf என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.


Click it and Unblock the Notifications












