வருமான வரித்துறையில் விளையாட்டு வீரர்கள் ஒதுக்கீடு காலியிடங்களுக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள விளையாட்டு வீரர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்யலாம். கூடுதல் விவரங்களுக்கு incometaxrajasthan.gov.in என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.
இந்தியாவில் வருமான வரித்துறை என்பது, இந்தியா விடுதலை பெற்ற பின்னர் செயல்படத் தொடங்கியது. இதற்காக இந்திய வருமானவரி சட்டம், 1961-ல் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு, 01-04-1962 முதல் இந்திய வருமான வரிச் சட்டம் செயல்படத் தொடங்கியது.
வருமான வரி கணக்கை சரிபார்த்தல் மற்றும் வசூலித்தல் ஆகியவற்றை இந்திய அரசின் வருமான வரித் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வருமானவரித்துறையானது இந்திய அரசின் நிதி அமைச்சக வருவாய்த்துறையின் நேரடி வரிகள் வாரியத்தின் கீழ் இயங்குகிறது.
வருமான வரித் துறையினர்க்கு, வருமான வரி படிவம் தாக்கல் செய்யும் போது, படிவத்தில் நிரந்த கணக்கு எண் (PAN) கட்டாயமாக குறிக்கப்பட்டிருக்க வேண்டும்.

இந்திய வருமான வரித் துறையினர், ஒரு நிதியாண்டில் ஒரு தனிநபர் ஈட்டிய மொத்த வருவாய்க்கு ஏற்ப வருமான வரி நிர்ணயித்துள்ளது. 60 வயது நிரம்பிய மூத்த குடிமக்களுக்கும், 80 வயது நிரம்பிய மிக மூத்த குடிமக்களுக்கும் வருமான வரி செலுத்துவதில் சிறிது சலுகை காட்டப்பட்டுள்ளது.
இந்த பெருமைவாய்ந்த வருமான வரித்துறையில்தான் தற்போது வருமானவரி இன்ஸ்பெக்டர் பிரிவில் 2 இடங்கள், வரி உதவியாளர் பிரிவில் 25 இடங்கள், ஸ்டெனோகிராபர் பிரிவில் 2 இடங்கள், எம்.டி.எஸ் பிரிவில் 26 இடங்கள் என மொத்தம் 55 இடங்கள் காலியாக உள்ளன. இதில் விளையாட்டு வீரர்களுக்கு என (தடகளம் 17, கிரிக்கெட் 6, வாலிபால், கூடைப்பந்து, கபடி, பாட்மின்டன் தலா 4, டேபிள் டென்னிஸ், துப்பாக்கிசுடுதல் தலா 3, குத்துச்சண்டை, மல்யுத்தம், ஈட்டி எறிதல், பாரா, லான் டென்னிஸ் தலா 2 இடங்கள்) இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன.
வருமான வரித்துறை பணியிடங்களுக்கான கல்வித்தகுதி:
இந்த வருமான வரித்துறை பணியிடங்களுக்கு ஸ்டெனோ, எம்.டி.எஸ்., பணிக்கு பிளஸ் 2, மற்ற பணிகளுக்கு பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வருமான வரித்துறை பணியிடங்களுக்கான வயதுத் தகுதி:
16.1.2024 அடிப்படையில் வருமான வரி இன்ஸ்பெக்டர் 18 முதல் 30, எம்.டி.எஸ். 18 முதல் 25, மற்ற பணிக்கு 18 முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகையும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
விளையாட்டுத்தகுதி:
இந்த வருமான வரித்துறை பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்யும், வீரர், வீராங்கனைகள், சர்வதேச, தேசிய, பல்கலைக்கழக போட்டிகளில் பங்கேற்று சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை:
இந்த வருமான வரித்துறை பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்வோர் ஸ்கில் தேர்வு, ஸ்டெனோ தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ சோதனை என்ற அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
இந்த வருமான வரித்துறை பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பம் செய்யவேண்டும்.
கடைசி தேதி:
இந்த வருமான வரித்துறை பணியிடங்களுக்கு வரும் ஜனவரி 16-ம் தேதிக்குள் (16.1.2024) விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.
இணையதள முகவரி:
கூடுதல் விவரங்களுக்கு incometaxrajasthan.gov.in என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.


Click it and Unblock the Notifications












