வருமான வரித்துறையில் (Income Tax Department) காலியாக உள்ள இயக்குநர், துணை இயக்குநர், உதவி இயக்குநர் (Director, Deputy Director, Assistant Director) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம்.கூடுதல் விவரங்களுக்கு
https://incometaxindia.gov.in/Lists/Recruitment Notices/Attachments/81/Advertisement-for-vacancy-notice-for-appointment-on-deputation-in-EDP-Cadre-New.pdf என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறிந்துகொள்ளலாம்.
இந்த சிறப்புவாய்ந்த வருமான வரித்துறையில் தான் தற்போது காலியாக உள்ள இயக்குநர், துணை இயக்குநர், உதவி இயக்குநர் (Director, Deputy Director, Assistant Director) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியாக உள்ள பணியிடங்கள்:
இயக்குநர் (Director) பணிக்கென 4 பணியிடங்களும், துணை இயக்குநர் (Deputy Director) பணிக்கென 7 பணியிடங்களும், உதவி இயக்குநர் (Assistant Director) பணிக்கென 6 பணியிடங்களும் வருமான வரித் துறையில் காலியாக உள்ளன.
கல்வித்தகுதி:
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் டிப்ளமோ, பிசிஏ, பி.எஸ்சி, எம்சிஏ, எம்எஸ்சி, பி.இ., பி.டெக், எம்.டெக் (Diploma, BCA, B.Sc, MCA, M.Sc, BE, B.Tech, M.Tech) ஆகிய பட்டப்படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்தவர்கள் விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
வயதுத்தகுதி:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 56 வயது பூர்த்தி அடையாதவராக இருக்க வேண்டும்.
சம்பள விவரம்:
இந்த வருமான வரித்துறை சார்ந்த பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணி அமர்த்தப்படும் நபர்கள் பே மேட்ரிக்ஸ் லெவல் - 10 / 11 / 13A (Pay Matrix Level - 10 / 11 / 13A) என்ற ஊதிய அளவுகளின் படி, ரூ.15,600/- முதல் ரூ.2,16,600/- வரை மாத ஊதியம் பெறுவார்கள்.
தேர்வு செய்யும் முறை:
டெபுடேஷன் (Deputation) முறைப்படி இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.
ண்ணப்பிக்கும் வழிமுறை:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் தரப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். வரும் 30-ம் தேதிக்குள் (30.12.2023) பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
கூடுதல் விவரங்களுக்குhttps://incometaxindia.gov.in/Lists/Recruitment Notices/Attachments/81/Advertisement-for-vacancy-notice-for-appointment-on-deputation-in-EDP-Cadre-New.pdf என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறிந்துகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications












