நீங்கள் விளையாட்டு வீரரா.. இந்த வாய்ப்பு உங்களுக்குத்தான்...!!

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள இந்திய வருமான வரித்துறை அலுவலகத்தில் காலியாக உள்ள வரி உதவியாளர், ஹவில்தார் பதவி இடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. தகுதிவாய்ந்த சர்வதேச விளையாட்டு வீரர்கள் இந்தப் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படவுள்ளனர்.

இந்த காலி பணியிடங்களுக்காக சர்வதேச விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு வேலைவாய்ப்பு அறிவிப்பினை மும்பை வருமான வரித் துறை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து நவம்பர் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வரி உதவியாளர் பதவிக்கு சம்பளமாக மாதம் ரூ.25,500 - 81,100 வழங்கப்படும்.
வயதுவரம்பு 18 முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். இந்தப் பணியிடத்துக்கு ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருப்பதுடன் கணினியில் பணிபுரியும் திறன் மற்றும் 1 மணி நேரத்தில் 8 ஆயிரம் வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

நீங்கள் விளையாட்டு வீரரா.. இந்த வாய்ப்பு உங்களுக்குத்தான்...!!

ஹவல்தார் பதவிக்கு சம்பளமாக மாதம் ரூ.18,000 - 56,900 வழங்கப்படும்.

வயதுவரம்பு, 18 முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மாநில, தேசிய, சர்வதேச விளையாட்டுத் தகுதி, சாதனைகள், உடல் தகுதி, மருத்துவ தகுதி அடிப்படையில் தகுதி பட்டியல் தேர்வு செய்யப்படுவர். பின்னர் அவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு அதில் இருந்து தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

1.4.2022 தேதிக்கு பிந்தைய விளையாட்டு சாதனைகள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலியிடங்கள் ஏற்பட்டுள்ள விளையாட்டு பிரிவுகள் ஏதாவது ஒன்றில் மாநில, பல்கலைக்கழக, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று குறைந்தது 3-வது இடத்திலாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்பது விதியாக உள்ளது.

www.mumbaicustomszone1.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Assistant/Deputy Commissioner of Customs, Personnel and Establishment Section, 8th Floor, New Customs House, Ballard Estate, Mumbai - 400 001 ஆகும்.

மேலும் கூடுதல் விவரங்களை பெற www.mumbaicustomszone1.gov.in என்ற இணையதள முகவரியைத் தொடர்பு கொள்ளலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The Income Tax Department is accepting applications for various posts. Candidates are asked to complete the accessible application form and submit the required papers on or before 30.11.2023.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+