மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி கழகத்தில் (IIITDM) காலியாக உள்ள Junior Research Fellow பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.31 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு பி.இ, பி.டெக் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி கழகம் (IIITDM)
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடம் : 01
பணி : Junior Research Fellow
கல்வித் தகுதி :
அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பணிக்கு தொடர்புடைய பிரிவில் பி.இ, பி.டெக், எம்.இ, எம்.டெக் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 32 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.31,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் விண்ணப்பப் படிவம் பெற்று, பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 05.03.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://iiitdm.ac.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணையதள லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












