மேலாளர் வேலை தேவையா... உடனடியாக ஐடிபிஐ வங்கிக்கு அப்ளை பண்ணுங்க....

ஐ.டி.பி.ஐ., வங்கியில் மேலாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியடங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்பித் தரலாம். கூடுதல் விவரங்களுக்கு idbibank.in என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.

ஐடிபிஐ வங்கி லிமிடெட் அல்லது இந்தியத் தொழில் மேம்பாட்டு வங்கி மத்திய அரசின் தொழில் வளர்ச்சி வங்கியாகும். மகாராஷ்டிர மாநிலம் மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த வங்கி நாட்டின் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த கடன்கள் மற்றும் இதர நிதி வசதிகளை வழங்குவதற்காக 1964 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின் மூலம் அமைக்கப்பட்டதாகும். இந்த வங்கி இந்தியாவில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த உருவாக்கப்பட்ட வங்கியாக இருந்தாலும், இது சாதாரண வணிக வங்கிகளைப் போலவும் சீரிய முறையில் திறம்பட செயல்படுகிறது.

மேலாளர் வேலை தேவையா... உடனடியாக ஐடிபிஐ வங்கிக்கு அப்ளை பண்ணுங்க....

ஐடிபிஐ வங்கி தற்போது இந்தியாவில் 1,513 கிளைகள், ஐக்கிய அரபு அமீரக நாட்டிலுள்ள துபாயில் ஒரு வெளிநாட்டுக் கிளை, சிங்கப்பூர் மற்றும் சீனாவின் பெய்ஜிங்கில் இரண்டு வெளிநாட்டு மையங்கள் உட்பட மொத்தமாக 1,013 மையங்களைப் பெற்றுள்ளது. மேலும், இந்த வங்கி 2,713 ஏடிஎம்களுடன் உலக அளவில் 10 ஆவது இடத்தில் இருக்கும் தொழில் மேம்பாட்டு வங்கியாகும்.

இந்தியாவில் தேசியமயமாக்கப்பட்ட, இந்திய அரசுக்குச் சொந்தமான 26 வணிக வங்கிகளுள் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்தப்பெருமை வாய்ந்த ஐடிபிஐ வங்கியில் தற்போது உதவி பொது மேலாளர் பிரிவில் 39, துணை பொது மேலாளர் பிரிவில் 1, மேலாளர் பிரிவில் 46 என மொத்தம் 86 இடங்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வித்தகுதி:

உதவி பொது மேலாளர் பிரிவு, துணை பொது மேலாளர் பிரிவு, மேலாளர் பிரிவு என ஒவ்வொரு பதவிக்கு வெவ்வேறு விதமான கல்வித்தகுதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வேலைவாய்ப்பு அறிவிப்பில் கல்வித்தகுதியைக் காணலாம். மேலும் idbibank.in என்ற இணையதள முகவரியிலும் பெறலாம்.

வயதுத்தகுதி:

உதவி பொது மேலாளர் பிரிவு, துணை பொது மேலாளர் பிரிவு, மேலாளர் பிரிவு பணியிடங்களுக்கு 25.12.2023 அடிப்படையில் உதவி பொது மேலாளர் 28 முதல் 40, துணை பொது மேலாளர் 35 முதல் 45, மேலாளர் 25 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை:

உதவி பொது மேலாளர் பிரிவு, துணை பொது மேலாளர் பிரிவு, மேலாளர் பிரிவு பணியிடங்களுக்கு எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் ஆட்கள் தேர்வு இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை:

உதவி பொது மேலாளர் பிரிவு, துணை பொது மேலாளர் பிரிவு, மேலாளர் பிரிவு பணியிடங்களுக்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை அனுப்பலாம்.

விண்ணப்பக்கட்டணம்:

உதவி பொது மேலாளர் பிரிவு, துணை பொது மேலாளர் பிரிவு, மேலாளர் பிரிவு பணியிடங்களுக்கு
ரூ. 1,000 விண்ணப்பக் கட்டணமாக செலுத்தவேண்டும்.
எஸ்.சி, எஸ்.டி., பிரிவினர் ரூ. 200 கட்டணம் செலுத்தினால் போதுமானது.

கடைசிநாள்:

உதவி பொது மேலாளர் பிரிவு, துணை பொது மேலாளர் பிரிவு, மேலாளர் பிரிவு பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரும் 25-ம் தேதிக்குள் (25.12.2023) அனுப்பவேண்டும்.

இணையதள முகவரி:

கூடுதல் விவரங்களுக்கு idbibank.in என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The Industrial Development Bank of India (IDBI) has released the IDBI SO Recruitment 2023 for 86 Specialist Officer Posts. The IDBI SO Recruitment will be done for posts such as Manager, Assistant General Manager, and Deputy General Manager posts. The application link for the IDBI SO Recruitment 2023 has been activated on 9th December 2023. The last date to apply for the IDBI SO Recruitment 2023 is 25th December 2023.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+