ஐசிஎஸ்ஐஎல் நிறுவனத்தில் டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் வேலை...!!

இன்டலிஜென்ட் கம்யூனிகேஷன் சிஸ்டம் இந்தியா நிறுவனத்தில் Intelligent Communication System India Limited-ல் -ICSIL) டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் (Data Entry Operator) பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் இந்தப் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு https://icsil.in/requirement-careers என்ற இணையதள லிங்க்கைத் தொடர்புகொள்ளலாம்.

இன்டலிஜென்ட் கம்யூனிகேஷன் சிஸ்டம்ஸ் இந்தியா லிமிடெட் (ICSIL) என்பது தொலைத்தொடர்பு ஆலோசகர்கள் இந்தியா லிமிடெட் (TCIL) நிறுவனத்தின் கூட்டு முயற்சியால் உருவானதாகும்.
இது மத்திய அரசின் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு பொதுத்துறை நிறுவனமாகும். ஐசிஎஸ்ஐஎல் என்பது ஐஎஸ்ஓ 9001:2015 சான்றளிக்கப்பட்ட நிறுவனம் மற்றும் பொதுத்துறை நிறுவன அந்தஸ்தைப் பெற்றுள்ள சிறப்புக்குரிய நிறுவனமாகும்.

ஐசிஎஸ்ஐஎல் நிறுவனத்தில் டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் வேலை...!!

ஐசிஎஸ்ஐஎல் நிறுவனத்தின் தலைவர் - நிர்வாக இயக்குநராக மத்திய அரசின் மூத்த ஐஏஎஸ் அதிகாரி செயல்பட்டு வருகிறார். ஐசிஎஸ்ஐஎல் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் வலுவான தடம் பதித்துள்ளது. 1987-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆண்டிலிருந்து, கணினிமயமாக்கல் மற்றும் நெட்வொர்க்கிங் ஆகியவற்றில் முழுமையான தீர்வுகளை வழங்குவதில் நிபுணத்துவம் பெற்ற ஐடி துறையில் முன்மாதிரியான சேவையை வழங்கி வருகிறது.

இந்த பெருமைமிகு ஐசிஎஸ்ஐஎல் நிறுவனத்தில்தான் தற்போது ஏராளமான டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

இந்த டேட்டா என்ட்ரி (Data Entry Operator) பணியிடங்களுக்குக் அரசு அல்லது அரசு சார்ந்த கல்வி நிறுவனங்களில் 10, 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
மேலும் விண்ணப்பதாரர்கள் எம்எஸ் ஆபீஸ்(MS Office) முடித்தவராக இருப்பது கூடுதல் சிறப்பாக கருதப்படும்.

இந்த ஐசிஎஸ்ஐஎல் (ICSIL) நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காண முடியும்.

இந்த பணியிடங்களுக்கு பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.21,215/- மாத ஊதியமாக கொடுக்கப்படும்.

இந்த ஐசிஎஸ்ஐஎல் நிறுவன பணிகளுக்கு பொருத்தமான நபர்கள் டைப்பிங் டெஸ்ட், சான்றிதழ் சரிபார்ப்பு, ஸ்கில் டெஸ்ட், இன்டராக்சன் (Typing Test, Document Verification, Skill Test / Interaction) ஆகிய தேர்வுகளின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்த Data Entry Operator பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் வரும் டிசம்பர் 9 (09.12.2023 அன்று முதல் 10.12.2023) 10-ம் தேதி வரை கீழே தரப்பட்டுள்ள இணைப்பில் இப்பணிக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு https://icsil.in/requirement-careers என்ற இணையதள லிங்க்கைத் தொடர்புகொள்ளலாம்.

அறிவிப்பு தொடர்பான அறிவிப்பைக் காண https://icsil.in/app/uploads/advertisement/DEO_Advertisment.pdf என்ற இணையதள லிங்க்கைக் காணலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Intelligent Communication System India has announced the vacancy of Data Entry Operator (ICSIL) in Intelligent Communication System India Limited. Eligible and interested persons can apply for this post. For more details visit the website link https://icsil.in/requirement-careers.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+