ரூ.1 லட்சம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க!

நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் எபிடிமியோலோஜி (ICMR NIE) நிறுவனத்தில் காலியாக உள்ள Consultant மற்றும் பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசிற்கு உட்பட்டு சென்னையில் செயல்பட்டு வரும் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் எபிடிமியோலோஜி (ICMR NIE) நிறுவனத்தில் காலியாக உள்ள Consultant மற்றும் பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 11 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு டிப்ளமோ போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.1 லட்சம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க!

நிர்வாகம் : நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் எபிடிமியோலோஜி (ICMR NIE)

பணி : Consultant மற்றும் பல பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

மொத்த காலிப் பணியிடங்கள் : 11

வயது வரம்பு :

  • Project Technical Officer (statistics)- 30 வயது
  • Project Section Officer - 33 வயது
  • Project Scientist- B & C (Non-Medical) - 40 வயது
  • Project Scientist-D - 45 வயது
  • Consultant (Medical) - 70 வயது

கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் டிப்ளமோ, பட்டம், Pharmacy, MBBS, முதுநிலைப் பட்டம், Masters Degree, Ph.D போன்ற ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் :

  • Project Technical Officer (statistics) மற்றும் Project Section Officer பணிக்கு ரூ.32,000
  • Project Scientist- B (Non-Medical) - ரூ.48,000 மாதம்.
  • Project Scientist- C (Non-Medical) - ரூ.54,000 மாதம்.
  • Project Scientist-D (Medical/Non-medical) - ரூ.54,000 முதல் ரூ.67,000 மாதம்.
  • Consultant (Medical) - ரூ.1,00,000 மாதம்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 15.02.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியிலான தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://nie.gov.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
ICMR NIE Chennai Recruitment 2022: applicatin invited for Consultant and Other post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+