மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் கீழ், சென்னை அயப்பாக்கத்தில் செயல்பட்டு வரும் தேசிய தொற்று நோய் நிறுவனத்தில், காலியாக உள்ள 47 தொழில்நுட்பம் மற்றும் ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பக்கலாம். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி நவம்பர் 8 ஆம் தேதி ஆகும்.
நிர்வாகம் : தேசிய தொற்று நோய் நிறுவனம் (ICMR-National Institute of Epidemiology)
மேலாண்மை : மத்திய அரசு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
பணியிடம்: அயப்பாக்கம், சென்னை

பணி விவரம்
Techinical Assistant - 33
Lab Attendant - I - 14
விண்ணப்பிக்கும் முறை:
காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பப்படிவத்தை, மின்னஞ்சல் வாயிலாக உரிய ஆவணங்கள் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். மறக்காதீங்க... இந்த பணியிடங்கள் நிரந்தமானவை.
வயது வரம்பு
தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விருப்புபவர்களின் வயது வரம்பு 30க்கு மிகாமல் இருக்க வேண்டும். அதேபோல, ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் வயது வரம்பு 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும். தளர்வு, சலுகை உள்ளிட்ட முழு விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வாயிலாக படித்து அறிந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
ப்ளீஸ் ஒரு முறை படிக்க...!
காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
ஊதியம்
ஒவ்வொரு பணிக்கு ஏற்றவாறு, மாத ஊதியம் வேறுபடுகிறது.
அதாவது Techinical Assistant பதவிக்கு ஊதிய நிலை-6 படி, ரூ.35.400- ரூ.1,12,400( Group-B, Level 6), Lab Attendant - I (Group C, Level 1) பதவிக்கு ஊதிய நிலை -Iபடி ரூ.18,000-ரூ.56,900 என்ற அடிப்படையில் மாத ஊதியம் பெறுவர். இதர சலுகைகள் குறித்த முழு விவரங்களும் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.
நோட் பண்ணுங்க...!
விண்ணப்பக் கட்டணம் ரூ.300 ஆகும். விண்ணப்பக் கட்டணத்தில் இருந்து யார், யார் விலக்கு பெறுகின்றனர் என்பதை அறிவிப்பில் உள்ளது.
விண்ணப்பிக்கும் வழிமுறை
அறிவிப்பினை முழுமையாகப் படிக்கவும்.
அறிவிப்பின் கீழே விண்ணப்ப படிவம் கொடுக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப படிவத்தை எந்த தவறும் இல்லாமல் நிரப்பவும்.
தேவையான ஆவணங்களை நகல் எடுத்து இணைக்கவும்.
ஆவணங்கள் மற்றும் விண்ணப்ப படிவத்தை https://nie.gov.in/oppurtunities/careers என்ற மின்அஞ்சல் முகவரிக்கு, நிர்ணயிக்கப்படும் கடைசி தேதிக்குள் கட்டாயம் அனுப்பி வைக்க வேண்டும். அதன் பின் விண்ணப்பிக்க முடியாது.
பணி நியமனம், நிபந்தனைகள் மற்றும் இதர விவரங்களை, அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வாயிலாக மட்டுமே அறிந்து கொள்ளவும். அதிகாரப்பூர்வ அறிவிப்பின்றி, எந்தவொரு அறிவிப்பாணைகளும் விண்ணப்பத்தாரர்கள் கவனத்தில் கொள்ள வேண்டாம்.


Click it and Unblock the Notifications












