பொதுத் துறை வங்கிகளுக்கான பணியாட்களை வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம் (IBPS) தேர்வு செய்கிறது. அதன்படி, தற்போது பொதுத் துறை வங்கியில் காலியாக உள்ள உதவி பேராசிரியர், Faculty Research Associates, Research Associates உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு பிரிவுகளில் இப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் இதற்கு ரூ.1.66 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : பொதுத்துறை வங்கிகள்
தேர்வு வாரியம் : வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம் (IBPS)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : உதவி பேராசிரியர்கள், ஆசிரிய ஆராய்ச்சி கூட்டாளர்கள், ஆராய்ச்சி கூட்டாளர்கள், இந்தி அதிகாரிகள், தகவல் தொழில்நுட்ப பொறியாளர்கள் (தரவு மையம்), தகவல் தொழில்நுட்ப தரவுத்தள நிர்வாகிகள், மென்பொருள் உருவாக்குநர்கள் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் B.E, B.Tech, MCA, M.Sc, Ph.D, முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
- விண்ணப்பதாரர் 21 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
ஊதியம் :
- Assistant Professor - ரூ.1,66,541
- Faculty Research Associate - ரூ. 98,651
- Research Associate - ரூ.74,203
- Hindi Officer - ரூ.74,203
- IT Engineer (Data Centre) - ரூ. 59,478
- IT Database Administrator - ரூ. 59,478
- Software Developer and Tester (Frontend, Backend) - ரூ. 59,478
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட வங்கிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://ibps.in/ என்ற இணையதளம் மூலம் 01.10.2021 முதல் 14.10.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு, தகுதித் தேர்வு, எழுத்துத் தேர்வு, குழு விவாதம், நேர்முகத் தேர்வு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் : விண்ணப்பிப்போர் ரூ.1000 கட்டணமாக ஆன்லைன் வழியில் செலுத்த வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.ibps.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ இணையதள முகவரியினைக் கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












