மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் புலனாய்வு பணியகத்தில் (Intelligence Bureau) காலியாக உள்ள இணை இயக்குநர், Deputy Central Intelligence Officer உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 516 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.2.20 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணிகளுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : புலனாய்வு பணியகத்தில் (Intelligence Bureau)
மேலாண்மை : மத்திய உள்துறை அமைச்சகம் (MHA)
பணி : Deputy Director, Deputy Central Intelligence Officer மற்றும் அதிகாரி உள்ளிட்டு மொத்தமாக 516 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மொத்த காலிப் பணியிடங்கள் : 516
கல்வித் தகுதி :
- Deputy Central Intelligence Officer, Deputy Director - BE, B.Tech, B.Sc தேர்ச்சி
- Junior Intelligence Officer- II - 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Senior Research Officer, Research Assistant - முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Assistant Central Intelligence Officer I, Senior Foreign Language Advisor - இளநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Assistant Central Intelligence Officer II - ஏதேனும் ஒரு துறையில் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Accountant மற்றும் Accounts Officer - Subordinate Accounts Service அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Security Officer (Technical) - பொறியியல் அல்லது M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Assistant Security Officer (Technical) - டிப்ளமோ, B.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Assistant Security Officer (General) - பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- Security/ Assistant (Motor Transport) - 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Multi Tasking Staff - 8-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
முன் அனுபவம்:
- மத்திய, மாநில, யூனியன் பிரதேச அரசுகளின் கீழ் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை வகித்திருக்க வேண்டும்.
- மேலும், சம்பந்தப்பட்ட பணியில் 02 முதல் 12 ஆண்டுகள் வரை முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 56 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.56,100 முதல் அதிகபட்சம் ரூ.2,08,700 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 10.10.2021 தேதிக்குள் தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 10.10.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.mha.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












